சி.எஸ்.கே அணிக்கெதிரான இந்த தோல்விக்கு 100 சதவீதம் நான் மட்டுமே காரணம் – ஒப்புக்கொண்ட வார்னர்

Warner
- Advertisement -

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 23வது லீக் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்களை மட்டுமே அடிக்க சென்னை அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 173 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது.

CSKvsSRH

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில் : இந்த தோல்விக்கு முழு காரணத்தையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். என்னுடைய பேட்டிங் இந்த போட்டியில் சிறப்பாக இல்லை, மிகவும் பொறுமையான ஆட்டத்தை நான் வெளிப்படுத்தினேன் அதுவே எங்களுக்கு பாதகமாக அமைந்தது.

நான் அடித்த பந்துகளெல்லாம் பீல்டரின் கைகளுக்கே சென்றதனால் அதிர்ப்தி அடைந்தேன் அதே வகையில் அதேவேளையில் மணிஷ் பாண்டே சிறப்பாக பேட்டிங் செய்தார். பின்னர் களமிறங்கிய வில்லியம்சன் எங்களை ஒரு நல்ல இலக்கிற்கு அழைத்துச் சென்றார். இருந்தாலும் இந்த போட்டிக்கு இது வெற்றிக்கு தேவையான ரன்கள் கிடையாது. நான் அடித்த 15 ஷாட்டுகள் பீல்டரின் கைகளுக்கு சென்றன.

warner 1

இதேபோன்று நல்ல பந்துகள் அனைத்தும் பவுண்டரிகள் வராமல் இருக்கும் பொழுது அது நம் உறுதியை உடைக்கும். ஒரு பேட்ஸ்மேனுக்கு ஒருமுறை ரன் அடிக்க முடியவில்லை என்ற எண்ணம் வந்து விட்டால் அதிலிருந்து மீண்டு வருவது கடினம். 170 ரன்கள் அடித்து நாங்கள் பவர்ப்ளே ஓவரில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை. இதுபோன்ற பேட்டிங் இருக்கு சாதகமான மைதானத்தில் விக்கெட் எடுக்காமல் விட்டால் வெற்றி பெறுவது கஷ்டம் தான்.

Warner

அந்த வகையில் சிஎஸ்கே அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி விளையாடினார் இது ஒரு நல்ல பேட்டிங் மைதானமாக நாள்முழுவதும் இருந்தது. மேலும் 170 ரன்கள் நிச்சயம் சேசிங் செய்யக்கூடிய ஒரு இலக்கு தான். ஒரு பேட்ஸ்மேனாக நான் நிறைய பந்துகளை வீணடித்து விட்டேன் என்றும் தோல்விக்கு தனது பொறுமையான ஆட்டமே காரணம் என்று வார்னர் ஒப்புக்கொண்டு பேசியது குறிப்பிடத்தக்கது..

Advertisement