கொல்கத்தா அணிக்கு எதிரான எங்களது தோல்விக்கு காரணம் இந்த ஒரு விடயம் மட்டும் தான் – வார்னர் வெளிப்படை

Warner
- Advertisement -

ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும், வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஆணியும் மோதின. டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீச தீர்மானம் செய்தார். அதன்படி பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் குவித்தது.

SRH-vs-KKR

- Advertisement -

அதிகபட்சமாக தொடக்க வீரரான ராணா 80 ரன்களும், திரிப்பாதி 53 ரன்களையும் குவித்தனர். அதன் பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி துவக்கத்திலேயே அடுத்தடுத்து சஹா மற்றும் வார்னர் ஆகியோரது விக்கெட்டை இழந்தது பின்னர் மணிஷ் பாண்டே மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன் குவித்தாலும் இறுதி நேரத்தில் அவர்களால் இலக்கை வெற்றிகரமாக துரத்த முடியவில்லை.

இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் அவர்கள் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் மட்டுமே குவித்தனர். இதன் காரணமாக கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் கூறுகையில் : இந்த இலக்கு ஒன்றும் எட்ட முடியாத இலக்கு கிடையாது.

bairstow

கொல்கத்தா அணி வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள் அவர்களது பார்ட்னர்ஷிப் சிறப்பாக இருந்தது. நாங்கள் பந்துவீச்சில் ஒவ்வொரு ஓவரின் போதும் முதல் பந்தினை சரியாக வீசவில்லை அதில் பல பவுண்டரிகளை கொடுத்தோம். அதே போன்று கடைசி சில ஓவர்களிலும் ரன்களை அதிகமாக விட்டுக் கொடுத்தோம். அதுமட்டுமின்றி துவக்கத்திலேயே இரண்டு விக்கட்டுகளை நாங்கள் இழந்து விட்டோம்.

kkr

பேர்ஸ்டோ மற்றும் மணிஷ் பாண்டே ஆகியோர் சிறப்பாகப் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர் அதனால் எங்களுக்கு வெற்றிக்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்த போட்டியில் பனிப்பொழிவு மாற்றத்தை உண்டாக்கியது. நாங்கள் முதல் போட்டியை வெற்றியுடன் துவங்க ஆசைப்பட்டோம் ஆனால் அது எங்களுக்கு கிடைக்காமல் போனது. இருப்பினும் இந்த மைதானத்தில் இன்னும் நான்கு போட்டிகள் எங்களுக்கு உள்ளது. அதில் நாங்கள் மைதானத்தை சிறப்பாக விளையாடி வெற்றி பாதைக்கு திரும்புவோம் என வார்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement