ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டி நேற்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வார்னர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்களை குவித்தது அதிகபட்சமாக அறிமுக வீரர் படிக்கல் 56 ரன்களும் டிவில்லியர்ஸ் 51 ரன்களும் அடித்தனர்.
அதன் பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி மணிஷ் பாண்டே பேர்ஸ்டோ ஆகியோர் விளையாடிய விதத்தை பார்க்கும் போது எளிதில் வெற்றி பெறும் என்று நினைத்தனர். ஆனால் இறுதியில் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் விழுந்து 153 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக பேர்ஸ்டோ 61 ரன்கள் குவித்தார். இதனால் பெங்களூரு அணி 10 ரன் வித்தியாசத்தில் இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஆட்டநாயகனாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றி பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சாளர் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த போட்டியின் தோல்வி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் கூறுகையில் : நான் இந்த போட்டியில் அவுட்டானது போன்று முன்னெப்போதும் அவுட் ஆனது இல்லை. இந்த போட்டியில் சில விடயங்கள் எங்களது தோல்வியைஉறுதி செய்தன.
மிச்செல் மார்ஷ்க்கு ஏற்பட்ட காயங்கள் அளிக்க பெரிய பாதிப்பாக அமைந்து. அவர் பெரிய அளவில் பிரச்சினை இல்லாமல் திரும்புவார் என்று நம்புகிறேன். சேஸிங்கின் போது ஆட்டம் முதல் பாதியில் எங்களது கட்டுப்பாட்டிலேயே இருந்தது. ஆனால் அதற்கு பிறகு பெங்களூர் அணியின் பவுலர்கள் சிறப்பாக விளையாடி போட்டியில் மாற்றினார். அதிலும் குறிப்பாக சாஹல் வீசிய ஓவர் இந்த போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அவர் தனி ஒருவராக எங்கள் அணியை வீழ்த்திவிட்டார்.
இருப்பினும் அடுத்த போட்டியில் இருந்து வெற்றிப் பாதைக்கு நாங்கள் திரும்புவோம். அபுதாபியில் நடைபெற உள்ள அடுத்த போட்டியில் எங்களுடைய குறைகளை களைந்து நாங்கள் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம் அது மட்டுமின்றி இந்திய இளம் வீரர்கள் அணியில் நிறைய இருக்கின்றனர். அவர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வரும் போட்டிகளில் வெளிப்படுத்துவார்கள் என்று தான் காத்திருப்பதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.