இவருக்கு எதிராக பவுன்சர் வீசினாலும் பந்து இடுப்பு அளவுக்கு தான் வருது. அதனால ஈஸியா சிக்ஸ் அடிச்சிடறாரு – வியந்து பேசிய வார்னர்

Warner

ஐபிஎல் தொடரின் 52 ஆவது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார்.

RCBvsSRH

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் பிலிப் 32 ரன்களையும், டிவில்லியர்ஸ் 24 ரன்களும் குவித்தனர். சன்ரைசர்ஸ் அணி சார்பாக சந்தீப் ஷர்மா மற்றும் ஹோல்டர் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதன்பின்னர் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 14.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சஹா 39 ரன்களையும், ஹோல்டர் ஆட்டமிழக்காமல் 10 பந்துகளில் 26 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக சந்தீப் சர்மா தேர்வானார்.

sandeep

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்ட வாரணர் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் குறித்தும் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

Holder 1

ஹோல்டர் அணியில் சேர்ந்ததிலிருந்து எங்கள் அணியில் இன்னும் பலம் பெற்றதாக உணர்கிறோம். அவர் ஒரு சிறப்பான ஆல்ரவுண்டர். அவரைப் போன்ற ஒரு உயரமான பேட்ஸ்மேனுக்கு எதிராக பவுன்சர் வீசிய நினைத்தால் அது அவரின் இடுப்பு அளவிற்கே செல்லும். அதனால் அவர் எளிதாக அதனை சிக்சர்கள் விளாசி விடுகிறார் என்று வார்னர் பேசியது குறிப்பிடத்தக்கது.