- Advertisement -
ஐ.பி.எல்

David Warner : தடையில் இருந்து இந்தியாவிற்கு திரும்பியதும் எனது வாழ்க்கையில் கிடைத்த புது அதிர்ஷ்டம் – வார்னர் பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 33 ஆவது போட்டி நேற்று ஐதராபாத் நகரில் 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், சுரேஷ் ரெய்னா தலைமையிலான சென்னை அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துவக்க வீரர்கள் வாட்சன் மற்றும் டுப்ளிஸிஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். அதன் பின் வந்த வீரர்கள் பொறுமையாக ஆட சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் சன் ரைசர்ஸ் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

- Advertisement -

பின்னர் ஆடிய சன் ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர்கள் இருவரும் சிறப்பாக ஆடினார்கள். வார்னர் 50 ரன்களும், பேர்ஸ்டோ 61 ரன்களையும் குவித்து வெற்றிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்தனர். பின்பு வந்த வீரர்கள் சுமாராக ஆட அந்த அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை குவித்தது. இதனால் சன் ரைசர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வார்னர் ஆட்டநாயகனாக தேர்வானார்.

போட்டி முடிந்ததும் பேசிய ஆட்டநாயகன் வார்னர் கூறியதாவது : நல்ல போட்டி சென்னை ரசிகர்களும் இந்த மைதானத்தில் அதிக அளவு குவிந்து இருந்தனர். இந்த போட்டியில் நானும் பேர்ஸ்டோவும் இணைந்து அருமையாக ஆடினோம். கடைசி வரை ஆடவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அதனை பேர்ஸ்டோ செய்தார். ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவர்க்கும் நன்றி. மேலும், என் குடும்பத்திற்கும் நன்றி.

இப்போது இந்தியா வந்ததும் ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. எனக்கு ஏற்கனவே இரண்டு அழகான குழந்தைகள் உள்ளனர். மேலும், தற்போது மீண்டும் நான் அப்பா ஆகியுள்ளேன். அழகான மனைவியும் இருக்கிறார். அவர்களுக்கு நன்றி சொன்னால் அது போதாது ஆகையால் இந்த விருதினை அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று வார்னர் கூறினார்.

- Advertisement -
Published by