- Advertisement -
உலக கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு – 4 சி.எஸ்.கே வீரர்களுக்கு இடம் (விவரம் இதோ)

இந்தியாவில் தற்போது 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய இந்த ஐபிஎல் தொடரானது எதிர்வரும் மே 26-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. அதன் பின்னர் ஜூன் மாதம் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. தற்போது ரசிகர்கள் மத்தியில் ஐபிஎல் ஃபீவர் நிலவி வரும் வேளையில் அதனைத் தொடர்ந்து டி20 உலக கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்காக மொத்தம் 20 அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. ஏற்கனவே இந்த 20 அணிகளையும் வைத்து நான்கு குரூப்புகள் பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளுக்கான அட்டவணையும் வெளியாக்கி உள்ளது.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி மே-1 ஆம் தேதிக்குள் இந்த தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் தங்களது 15 பேர் கொண்ட வீரர்களை பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்று கெடு விதித்திருந்தது. இதன் காரணமாக தற்போது அனைத்து அணிகளும் தங்களது அணியின் வீரர்களை அறிவிக்க தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி 15 பேர் கொண்ட அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அந்த அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சிஎஸ்கே அணியை சேர்ந்த 4 வீரர்களுக்கு இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான அணியில் இடம் கிடைத்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் சென்னை அணியில் இடம் பெற்றுள்ள டேவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா மற்றும் மிட்சல் சான்ட்னர் ஆகியோரும் அதிரடி பேட்ஸ்மேனான டேரல் மிட்சல் என நான்கு சிஎஸ்கே வீரர்கள் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளனர். மேலும் நான்காவது முறையாக டி20 உலக கோப்பை தொடருக்கான கேப்டனாக வில்லியம்சன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : மும்பை, கொல்கத்தா அணிகளுக்கு அடுத்து சேப்பாக்கத்தில் வரலாறு படைத்த சி.எஸ்.கே – கோட்டைனா சும்மாவா?

அவரது தலைமையில் ஏற்கனவே நியூசிலாந்து அணி 2016-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் அரையிறுதி சுற்றுக்கும், 2021-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இறுதி சுற்றுக்கும், 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -