தோனி மீது தப்பு சொல்ல எதுவுமில்லை. எல்லாம் அம்பயரை தான் சொல்லணும் – கடுப்பான வார்னர்

Dhoni-anger
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் துபாயில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 167 ரன்கள் குவித்தது. அதன்பிறகு விளையாடிய ஐதராபாத் அணி அவ்வப்போது விக்கெட்டுகளை இழந்து இறுதி நேரத்தில் 12 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது.

wide

- Advertisement -

அப்போது 19-வது ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசினார் அந்தப் பந்தை அம்பயரும் ஒயிடு என்று அறிவித்தார். அதே போன்று அடுத்த பந்தையும் ஆப் ஸ்டம்புக்கு வெளியில் வீச வீசினார். அம்பயரும் ஒயிடு சிக்னல் கொடுக்க கை நீட்டினார்.

ஆனால் அதற்குள் கீப்பிங் செய்து கொண்டிருந்த கேப்டன் தோனி அம்பயரை நோக்கி கோவமாக ஆக்ரோஷ பார்வை ஒன்றை விட்டார். அதனை கண்ட அம்பயர் அந்த முடிவை மாற்றிக் கொண்டார் இதனை டக் அவுட்டில் இருந்து பார்த்த வார்னர் அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் இது குறித்து தற்போது வார்னர் கருத்து ஒன்றினை அளித்துள்ளனர்.

umpire

இதுகுறித்து வார்னர் கூறுகையில் : அன்றைய ஆட்டத்தில் அம்பயர் அந்தப் பந்தை ஒயிடு என சொல்லி இருந்தால் தோனி விரக்தி அடைந்திருப்பார். ஆனால் அது ஒயிடு பந்துதான் இருப்பினும் தோனியின் உடல்மொழியை கண்டு அம்பயர் முடிவை மாற்றி கொண்டிருக்கலாம். களத்தில் உள்ள கேப்டன்கள் இது போல செயல்படுவது சாதாரணமான ஒன்றுதான்.

cskvssrh

ஆனாலும் நான் தோனியை குறை கூறவில்லை. அம்பயர்கள் அவர்களது முடிவை சரியாக எடுக்க வேண்டும் இதில் விவாதிக்க ஒன்றுமில்லை என வார்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement