வார்னர் எடுத்த இந்த தவறான முடிவே அணியின் தோல்விக்கு காரணம் – ரசிகர்கள் கொதிப்பு

Warner-3
- Advertisement -

ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டி நேற்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வார்னர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்களை குவித்தது அதிகபட்சமாக அறிமுக வீரர் படிக்கல் 56 ரன்களும் டிவில்லியர்ஸ் 51 ரன்களும் அடித்தனர்.

padikkal

அதன் பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி மணிஷ் பாண்டே பேர்ஸ்டோ ஆகியோர் விளையாடிய விதத்தை பார்க்கும் போது எளிதில் வெற்றி பெறும் என்று நினைத்தனர். ஆனால் இறுதியில் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் விழுந்து 153 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக பேர்ஸ்டோ 61 ரன்கள் குவித்தார். இதனால் பெங்களூரு அணி 10 ரன் வித்தியாசத்தில் இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

ஆட்டநாயகனாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றி பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சாளர் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் எளிதாக சென்று கொண்டிருந்த இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு காரணம் வார்னர் எடுத்த ஒரு தவறான முடிவுதான் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலை தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அது யாதெனில் சன்ரைசர்ஸ் பேட்டிங் ஆர்டரை பொருத்தவரை டாப் ஆர்டரில் விளையாடும் வார்னர், பேர்ஸ்டோ மற்றும் பாண்டே ஆகியோர் மட்டுமே நம்பியிருக்கிறது.

Bairstow

அவர்களைத் தவிர பின்வரிசையில் பிரியம் கார்க், விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, ரசித்கான் என சுமாராக செயல்படும் வீரர்களையே வைத்திருந்தது . அனுபவமின்மை காரணமாக இந்த போட்டியில் பின்வரிசை வீரர்கள் சரியாக விளையாட முடியாமல் சன்ரைசர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றும் விட்டது. ஆனால் இந்த அணியில் உலகத்தரம் வாய்ந்த வீரரான கேன் வில்லியம்சனை வார்னர் அணியில் எடுக்கவில்லை.

- Advertisement -

சர்வதேச அளவில் தலைசிறந்த கேப்டனாகவும், சிறப்பான பேட்ஸ்மேனாகவும் தன்னை நிலைநிறுத்தி வரும் வில்லியம்சன் அணியில் இல்லாதது மிகப்பெரிய மாற்றத்தை தந்தது. மிச்செல் மார்ஸ் இடத்தில் வில்லியம்சன் இடம் பெற்று இருந்தால் நிச்சயம் இது போன்ற போட்டியை சன்ரைசர்ஸ் அணி வென்று இருக்கும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Williamson

ஏனெனில் ஒரு கட்டத்தில் 121 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இருந்த சன்ரைசர்ஸ் அணி அதன் பின்னர் 32 ரன்கள் எடுப்பதற்குள் மீதமுள்ள 8 விக்கெட்டுகளை இழந்து ஆலவுட் ஆனது. இதுபோன்ற போட்டிகளில் வில்லியம்சன் இருந்திருந்தால் நிச்சயம் சன் ரைசர்ஸ் வெற்றிபெற்றிருக்கும். இதனால் நிச்சயம் அடுத்த போட்டியில் வில்லியம்சன் அணியில் இடம் பெற வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement