ஐ.பி.எல் அணிகளிலேயே சிறந்த டெத் பவுலிங் கொண்ட அணி இதுதான் – டேவிட் வார்னர் புகழாரம்

warner
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறையும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 2 முறையும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

SRH

- Advertisement -

ஒவ்வொரு அணியும் வெற்றி பெற அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் கடுமையாக உழைப்பார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எடுத்தோம் ஆனால் நல்ல பேட்ஸ்மேன்கள் அதிகம் இருப்பார்கள். அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எடுத்தால் நல்ல பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள்.

இப்படிப் பார்த்தால் சன்ரைசர்ஸ் அணியில் திறமையான பந்து வீச்சாளர்கள் அதிகம். இதுகுறித்து தற்போது சன் ரைசர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் பேசியுள்ளார்..இதுகுறித்து அவர் பேசுகையில் : எங்கள் அணி சிறப்பான பந்து வீச்சினை கொண்டுள்ளது. ஐபிஎல் தொடருக்கு தேவையான வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு ஆகிய இரண்டும் உள்ளது.

இதன் காரணமாக எங்களால் எளிதில் வெற்றி பெற முடிகிறது .ஐபிஎல் அணிகளிலேயே எங்கள் அணி பந்து வீச்சில் மிகவும் வலுவாக உள்ளது. அதேநேரத்தில் பேட்டிங்கில் ஜானி பேர்ஸ்டோவுடன் சேர்ந்து நான் நன்றாக பேட்டிங் செய்து வருகிறேன். எங்களிடம் புரிதல் மிக அதிகமாக உள்ளது இதன் காரணமாக பேட்டியும் எளிதாக உள்ளது என்று கூறியுள்ளார் டேவிட் வார்னர்.

- Advertisement -

இதுவரை மும்பை மற்றும் சென்னை, கொல்கத்தா அணிகள் ஐ.பி.எல் தொடர்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் அணிகளாக திகழ்ந்து வருகின்றன. ஆனால் கடந்த சில வருடங்களாக சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சில் பலமான அணியாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, ரஷீத் கான் போன்ற பந்துவீச்சாளர்கள் இருப்பதால் அந்த அணி நிச்சயம் பந்துவீச்சில் பலமாக உள்ளது என்றே கூறலாம்.

srh

மேலும் சன் ரைசர்ஸ் அணி 140 ரன்களுக்கு கீழ் எடுத்தும் பல போட்டிகளை வெற்றிகரமாக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. பல போட்டிகளில் சன் ரைசர்ஸ் அணி குறைந்த ரன்களில் எதிரணியை சுருட்டியுள்ளதும் நாம் கண்டதே.

Advertisement