இது மட்டும் நடந்தா ரசிகர்களுக்காக மைதானத்தில் “புட்ட பொம்மா” டேன்ஸ் ஆடுவேன் – வார்னர் சொன்ன ட்ரீட்

Warner-4

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரரான டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த கொரோனா காலத்தில் ஐபிஎல் தொடர் தாமதமானதன் காரணமாக முழுநேர டிக்டாக்கில் ஈடுபட்டனர். தனது குடும்பத்துடன் சேர்ந்து பல ஆடல் பாடல் வீடியோக்களை டிக்டாக்கில் பதிவிட்டு அசத்தினார்.

warner 1

அவரது வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. அதுமட்டுமின்றி தெலுங்கில் பிரபலமாக வலம் வந்த பாடலான “புட்ட பொம்மா” பாடலுக்கு அவர் குடும்பத்துடன் ஆட்டம் போட்டு இருந்தார். அந்த வீடியோ இணையத்தில் அதிக அளவு வைரலானது.

இந்நிலையில் தற்போது இந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்திய ஐதராபாத் அணி தற்போது குவாலிபயர் 2 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை வென்றால் அடுத்து மும்பை அணியுடன் இறுதி போட்டியில் மோதும்.

அந்த இறுதி போட்டியையும் வென்றால் நிச்சயம் மைதானத்திலேயே “புட்ட பொம்மா” பாடலுக்கு டான்ஸ் ஆடுவேன் என ரசிகர்களுக்கு அவர் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் கடைசியாக நடைபெற்ற 4 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று வரும் ஐதராபாத் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெறும் என்று என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -