இங்கிலாந்து ரசிகர்களுக்கு தனது ஜாலியான செயல் மூலம் சிறப்பாக பதிலளித்த

Warner-1
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தற்போது ஆஷஸ் தொடர் முதல் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து 13 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் வெற்றிக்கு 385 ரன்கள் தேவை என்பதால் இந்த போட்டி டிராவில் முடிய அதிக வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ரசிகர்கள் ஆஸ்திரேலிய அணியின் வீரரான வார்னர் பீல்டிங் செய்யும் போது அவரை வெறுப்பேற்றும் விதமாக கத்திக் கொண்டிருந்தனர். அதற்கு பதில் தரும் விதமாக வார்னர் தனது பேண்ட் பாக்கெட்டை எடுத்து வெளியே காட்டி தன்னிடம் சாண்ட் பேப்பர் எதுவும் இல்லை என்பதுபோல காட்டினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பேண்ட் பாக்கெட்டில் சான்ட் பேப்பர் வைத்து தேய்த்தால் ஸ்மித் வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோர் ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதனை குறிப்பிட்ட இங்கிலாந்து ரசிகர்கள் ஆஸ்திரேலிய வீரர்களை வெறுப்பேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement