ஆஷஸ் தொடரில் வார்னரை கிண்டல் செய்த இங்கிலாந்து ரசிகர்கள் – வலுக்கும் கண்டனம்

Warner
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாரம்பரிய தொடரான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி இன்று பர்மிங்காம் நகரில் துவங்கியது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

அடுத்த 2 ஆண்டுகளுக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை ஐசிசி நடத்த திட்டமிட்டுள்ளதால் அதன் முதல் போட்டியாக இந்த போட்டி துவங்கிய உள்ளது குறிப்பிடத்தக்கது. நிலையில் முதலில் பேட்டிங்கை துவங்கி ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ஹெட் ஆகியோர் நிதானமாக பேட்டிங் செய்தனர்.

தேனீர் இடைவேளை வரை அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்களை குவித்துள்ளது. இந்நிலையில் வார்னர் அவுட்டாகி செல்லும் போது அவரை வெறுப்பேற்றும் விதமாக இங்கிலாந்து வீரர்கள் அவர் தடை செய்யப்பட்டபோது உபயோகப்படுத்திய சேன்ட் பேப்பரை கையில் வைத்து அவரை வெறுப்பேற்றும் வகையில் வழியனுப்பி வைத்தனர். இங்கிலாந்து ரசிகர்களின் இந்த செயல் சமூக வலைதளங்களில் தற்போது கண்டனத்துக்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement