உலக கிரிக்கெட்டில் மீண்டும் நுழைந்த வார்னர்.! இம்முறை பேட்ஸ்மேன் ஆக இல்லை.

warner
- Advertisement -

சில மாதங்களுக்கு தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் சிலர் பந்தை சேதபடுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் துணை கேப்டன் டேவிட் வார்ணர் மற்றும் இளம் வீரர் கேமரூன் பான்க்ராஃப்ட் ஆகியோருக்கு கிரிக்கெட்டில் ஓராண்டு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவுள்ளார் வார்னர்.

warnersmith

- Advertisement -

கனடா கிரிக்கெட் சங்கம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இணைந்து நடத்தும் தொடர் வரும் ஜூன் 28 தேதி முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்த தொடரில் 4 கனடா நாட்டு அணியும் 1 மேற்கிந்திய அணியும் பங்கு பெரும். 22 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் 2 சர்வேதேச வீரர்களை தங்கள் அணியில் சேர்த்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தொடரில் சில மாதங்களுக்கு முன்னர் பால் டெம்பரிங் விவகாரத்தில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தடை செய்யப்பட்ட ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித் மற்றும் வார்ணர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்,இதில் வார்னர் வின்னிபெக் ஹாஃஸ் என்ற அணியிலும், ஸ்டீவ் ஸ்மித் டொர்னடோ நேஷனல்ஸ் அணிகளிலும் விளையாட்டுள்ளனர்.

warner

தற்போது வார்னர் சர்வதேச போட்டிகளில் மீண்டும் கால் பதித்துள்ளார். ஆனால், கிரிக்கெட் வீரராக இல்லை வர்ணனையாளராக அவதாரமேடுத்துள்ளார் வார்னர். தற்போது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான சர்வதேச ஒரு நாள் போட்டியில் வர்ணனையாளராக நியமிக்கபட்டுள்ளார் வார்னர். இந்த தொடரின் ஒளிபரப்பு உரிமையை சேனல் 9 என்ற தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement