20 ஆவது ஓவரை வீச ஸ்பின்னரை அழைத்ததன் காரணம் இதுதான் – வெற்றிக்கு பிறகு வார்னர் பேட்டி

Warner
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 14 வது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 164 ரன்களைக் குவித்தது.

- Advertisement -

அதிகபட்சமாக அந்த அணியின் இளம் வீரரான பிரியம் கார்க் 26 பந்துகளில் 51 ரன்களையும் அபிஷேக் வர்மா 24 பந்துகளில் 31 ரன்கள் அடித்து அசத்தினார். பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஜடேஜா 50 ரன்களையும், தோனி 47 ரன்களையும் அடித்தனர்.

இதன் காரணமாக சென்னை அணி 7 ரன் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது. பிரியம் கார்க் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் அடைந்த தோல்வி சென்னை அணிக்கு தொடர்ச்சியான 3 ஆவது தோல்வியாகும். இந்த தோல்வி மீண்டும் சென்னை ரசிகர்களுக்கு பெரிய வருத்தத்தை அளித்துள்ளது.

srh

இந்நிலையில் இந்தப் போட்டியின் வெற்றிக்கு பிறகு பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் கூறுகையில் : இறுதி ஓவரை வேறு வழியின்றி சமத்தை நான் வீச தேர்வு செய்தேன். போட்டியின் 19வது ஓவரில் புவி விட்டு சென்றதும் கலீலை வைத்து அந்த ஐந்து பந்துகளையும் வீசி முடிக்க நினைத்தேன். அத்தோடு போட்டியையும் முடிக்க நினைத்தேன்.

- Advertisement -

இறுதி ஓவரை சமத் வீச காரணம் யாதெனில் அவரது உயரமும் அவர் இன்று பந்து வீசிய விதம் தான் என்று வார்னர் கூறினார். மேலும் மைதானமும் ஸ்லோவாக இருந்ததால் பந்து வீச்சாளர்கள் அதை உபயோகித்து சிறப்பாக பந்துவீசினார்கள். இந்த போட்டி உண்மையில் மிகவும் சவாலான போட்டியாக அமைந்தது. ஆரம்பத்தில் பந்தில் ஸ்விங் இருந்தது இப்போட்டியில் தெரிந்தது.

srh

இளம் வீரர்களுக்கு நான் சொல்ல வேண்டியது யாதெனில் இது போன்ற ஆட்டங்களில் ரன்களை குவித்து மைதானங்களில் தன்மையை அறிந்து நன்றாக விளையாட வேண்டும். அந்த வகையில் இன்றைய போட்டியில் அவர்கள் விளையாடிய விதம் எனக்கு பெருமையாக உள்ளது. மேலும் பந்துவீச்சாளர்கள் யார்க்கர் பந்து, ஸ்லோ பால் என அனைத்தையும் சிறப்பாக வீசினார்கள். இந்த வெற்றியை அப்படியே கொண்டு செல்ல நினைக்கிறோம் என்று வார்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement