இந்த ஐ.பி.எல் தொடரில் எங்கள் அணிக்கு கிடைத்த சிறப்பான வீரர் இவர்தான் – வார்னர் புகழாரம்

Warner-1

தமிழகத்தில் இருந்து தமிழகத்தின் ஊர் புறத்திலிருந்து எப்படியாவது ஒரு கிரிக்கெட் வீரர் வந்துவிட மாட்டாரா என இருந்த பல ஆண்டுகால ஏக்கம் தற்போது நிறைவேறி இருக்கிறது. சொல்லப்போனால் இப்போதுதான் தமிழக ஊர்ப்புற திறமைகளின் தாக்கம் சர்வதேச அளவில் வெளிவந்து கொண்டிருக்கின்றனர் என்று கூறலாம்.

Nattu

இந்த வருட ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக ஆடி வருபவர் சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த தங்கராசு நடராஜன். இவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர். இந்த வருட ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக ஆடி தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி விட்டார் என்றுதான் கூற வேண்டும்.

ஹைதராபாத் அணி இரண்டாவது குவாலிபயர் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் ஐதராபாத் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது…
இந்த தோல்விக்கு பின்னர் பேசிய ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில்… இந்த வருட ஐபிஎல் தொடரில் நடராஜன் ஒரு பொக்கிஷமாக கிடைத்து இருக்கிறார். அவரது அபாரமான பந்து வீச்சு எங்களது அணிக்கு மிகவும் உதவியாக இருந்தது.

Nattu-2

இந்த வருட ஐபிஎல் தொடரின் கண்டுபிடிப்பு என்று தான் அவரை கூறவேண்டும். அவரிடம் சர்வதேச தரம் இருக்கிறது. வெகு சீக்கிரத்தில் சர்வதேச அளவில் தனது இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் டேவிட் வார்னர்.

- Advertisement -

nattu

நடராஜன் இந்த வருட ஐபிஎல் தொடரில் மட்டும் விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், மகேந்திரசிங் தோனி என பெரிய வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்து மொத்தம் 16 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.