ஸ்மித், கோலி இருவரில் யார் பெஸ்ட் ? மழுப்பலான பதிலை சொல்லி சமாளித்த வார்னர் – விவரம் இதோ

Warner
- Advertisement -

விராட் கோலி மற்றும் ஸ்டீவன் ஸ்மித் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மென் என்ற விவாதம் கடந்த 7 வருடங்களாக தொடர்ந்து சென்று கொண்டேதான் இருக்கிறது. இருவரும் போட்டி போட்டு எதிர் அணியின் பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கி வருகின்றனர்.ஸ்டீவன் ஸ்மித் டெஸ்ட் போட்டியில் முதல் இடத்திலும் ஒருநாள் போட்டியில் எட்டாம் இடத்திலும் இருக்கிறார்.

Smith

- Advertisement -

விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இரண்டாம் இடத்திலும், ஒருநாள் போட்டிகளில் முதல் இடத்திலும் இருக்கிறார். எப்படிப் பார்த்தாலும் இருவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வீரர்கள்தான். ஆனால் விராட் கோலி ஆடும் ஆட்டமெல்லாம் நேர்த்தியாக இருக்கும் .

ஸ்டீவன் ஸ்மித் தனக்கே உரிய வித்தியாசமான பாணியை கடைபிடித்து ரன் குவிப்பார். எப்போதெல்லாம் ஒரு வீரர் ரசிகர்களுடன் உரையாடுகிறாரோ அப்போதெல்லாம் ரசிகர்கள் இருவரில் யார் சிறந்தவர் என்ற கேள்வியை எடுத்துவிடுவார்கள். அதேபோல் தான் சமீபத்தில் டேவிட் வார்னர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.

warner 1

அப்போது டேவிட் வார்னரிடமும் இந்த கேள்வியை கேட்டு விட்டார்கள். ரசிகர்கள் இதற்கு டேவிட் வார்னர் மழுப்பலாக ஒரு பதிலைக் கூறி விட்டு தப்பி சென்று விட்டார் அவர் கூறுகையில்…
டிசம்பர் மாதம் நடைபெறும் இந்தியாவிற்கு எதிரான தொடரில் பேட்ஸ்மேன்களுக்கும், பந்து வீச்சாளர்களுக்கும் மட்டுமே போட்டி.

smith

விராட் கோலிக்கும் ஸ்டீவன் ஸ்மித்திற்க்கும் இடையே போட்டி கிடையாது. உண்மையை சொல்ல வேண்டுமானால் இருவருமே மிகச் சிறந்த வீரர்கள் இருவரையுமே விட்டுக்கொடுக்க முடியாது.
இருவரும் தங்களது பாணிகளில் அசாத்திய திறமை பெற்றவர்கள் .இதன் காரணமாக சிறந்த பேட்ஸ்மென் யார் என்று கூறுவது மிக கடினம் என்று கூறியுள்ளார் டேவிட் வார்னர்.

Advertisement