சன் ரைசர்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்ட வார்னர். அதற்கு பதில் கொடுத்த வார்னர் – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு

Warner-1
- Advertisement -

ஹைதராபாத் அணி நிர்வாகம் அதிரடியாக டேவிட் வார்னரை தலைமைப் பொறுப்பிலிருந்து தூக்கியது. அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் புதிய தலைவராக தற்போது பொறுப்பேற்றுள்ளார். மேலும் நேற்று முன்தினம் நடந்து முடிந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் விளையாடும் அணில் கூட இடம் பெறவில்லை. அவரது பார்ம் மிக மோசமாக இருக்கிறது. மொத்தமாக 6 போட்டிகளில் இதுவரை 193 ரன்கள் குவித்துள்ளார். மேலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் வெறும் 110.50 தான். இதன் காரணமாக அணியின் நலன் கருதி அவரை நாங்கள் விளையாட வைக்க வில்லை என்று ஐதராபாத் அணியின் கிரிக்கெட் இயக்குனர் டாம் மூடிவிளக்கம் அளித்திருந்தார்.

warner 1

இந்த போட்டியில் பங்கு பெறாத வார்னர் போட்டி தொடங்குவதற்கு முன்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில பதிவுகளை பகிர்ந்துள்ளார் அது அனைத்து ரசிகர்களையும் கண் கலங்க வைத்துள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று முன்தினம் வார்னர் பல ஸ்டோரிகளை பதிவிட்டிருந்தார்.

- Advertisement -

அதில் முதலில் ஹைதராபாத் அணியின் சொந்த மைதானமாக ராஜீவ் காந்தி மைதானத்தில் டேவிட் வார்னர் சதமடித்து கொண்டாடிய வீடியோ ஒன்றை பகிர்ந்தார். அதை தொடர்ந்து அவருடைய ரசிகர் ஒருவர் அவரை மிக அழகாக தத்துரூபமாக பெயிண்டிங் மூலம் வரைந்த புகைப்படத்தை பகிர்ந்து நன்றி என தெரிவித்திருந்தார்.

warner ins

டேவிட் வார்னர் இவ்வாறு சோகமாக பகிர்ந்த பதிவுகள் அனைத்து ரசிகர்களையும் கண்கலங்க வைத்தது. மேலும் அவர் முன்னரே விளையாடிய போட்டிகளில் தொகுப்புகளை எடுத்து சமூக வலைதளங்களில் வீடியோ மூலம் அனைவரும் பதிவிட்டு வருகின்றனர். ஹைதராபாத் அணிக்காக கிட்டத்தட்ட ஆறு ஆண்டு காலமாக உழைத்த ஒரு வீரரை இவ்வாறு நடத்துவது சரி இல்லை என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

warner ins 1

மேலும் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி விளையாடிக் கொண்டிருக்கும் வேளையில், உள்ளே இருக்கும் வீரர்களுக்கு டேவிட் வார்னர் பழச்சாறுகள் மற்றும் துண்டுகளை எடுத்து செல்ல முற்பட்ட பொழுது, சக வீரர்கள் டேவிட் வார்னரை வேலை செய்ய விடாமல் அவரிடம் இருந்து பொருட்களை வாங்கும் முயற்சித்தது அனைவரையும் நெகிழ வைத்தது. இருப்பினும் டேவிட் வார்னர் தாமாகவே முன்வந்து அனைத்து வீரர்களுக்கும் உபசரிப்பு செய்தார்.

Advertisement