டெஸ்ட் போட்டியில் 400 ரன்களை இந்திய வீரரான இவரால் அடிக்க முடியும் – வார்னர் போட்டி

Warner

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சில தினங்களுக்கு முன்னர் முடிவு பெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான வார்னர் முச்சதம் அடித்து அசத்தினார். மேலும் ஆட்டமிழக்காமல் 335 ரன்களை எடுத்திருந்தபோது ஆஸ்திரேலிய கேப்டன் டிக்ளேர் செய்தார்.

Warner-1

இன்னும் சற்று தாமதமாக டிக்ளேர் செய்திருந்தால் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் லாராவின் மிகப்பெரிய சாதனையான 400 ரன்களை கடந்து இருப்பார் என்று ரசிகர்கள் அனைவரும் ஆஸ்திரேலிய கேப்டன் பெயினை இணையத்தில் தொடர்ந்து வசைபாடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது டேவிட் வார்னர் தனது முச்சதம் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

ஒவ்வொரு நபரையும் பொருத்தே அவர்களுடைய ஆட்டம் உள்ளது. ஆஸ்திரேலியாவில் பவுண்டரிகளின் நீளம் சற்று அதிகமானது. அதனால் பந்தை பவுண்டரிக்கு விரட்டுவது கடினமாக ஒரு விடயமாகும். நீங்கள் ஒருவேளை அதிரடியாக விளையாடி சோர்ந்து விட்டால் பவுண்டரிகள் அடிப்பது கடினமாகி விடும். நான் இரண்டு ரன்களை அடிக்க அதிகமாக முயற்சிப்பேன் ஏனெனில் என்னால் பவுண்டரி அடிக்க முடியும் இது போன்ற ரன்களை எடுக்க முடியும்.

மேலும் நான் இந்த சாதனையை தவறவிட்டாலும் டெஸ்ட் போட்டியில் 400 ரன்களை முறியடிக்கும் வீரர் என்று நான் ஒருவரை கூற வேண்டும் என்றால் நிச்சயம் அது இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா அடிப்பார் என்றே கூறுவேன். ஏனெனில் அவருக்கு இது போன்ற பெரிய ஆட்டங்களில் பெரிய ரன்களை அடிக்கும் பழக்கம் உள்ளதாக நான் நினைக்கிறேன் மேலும் அவரால் நிச்சயம் பெரிய பவுண்டரிகளை அடிக்க முடியும் என்று நான் நம்புகிறேன் என்று வார்னர் கூறினார்.

- Advertisement -