IND vs AUS : வலைப்பயிற்சியை பாதியில் விட்டு கண்கலங்கி நின்ற வார்னர் – காரணம் இதுதான்

உலகக் கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று மதியம் 3 மணிக்கு மோதவுள்ளன. இந்த போட்டி

Warner
- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று மதியம் 3 மணிக்கு மோதவுள்ளன. இந்த போட்டி குறித்து தற்போது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரிக்கத் துவங்கியுள்ளது. அதற்கு காரணம் யாதெனில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளுமே மிக பலம் வாய்ந்த அணிகள்.

waner 1

- Advertisement -

ஆஸ்திரேலியா தொடர்ந்து இரு போட்டியிலும் வென்று இன்று இந்தியாவை சந்திக்கிறது. அதேபோன்று இந்தியா முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சிறப்பாக வீழ்த்தி இன்று ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இந்த போட்டி ஒரு முக்கியமான போட்டியாகும். இந்நிலையில் நேற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த வார்னர் பாதியில் பயிற்சியை நிறுத்தியது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணியுடனான போட்டிக்காக நேற்று ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். குறிப்பாக வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது வார்னர் பலமான ஷாட்டுக்களை தொடர்ச்சியாக ஆடிக்கொண்டிருந்தார். அப்பொழுது வலைப்பயிற்சியில் அவருக்கு பந்துவீசிய இந்திய வம்சாவளியை சேர்ந்த பந்துவீச்சாளர் ஜெய்கிஷன் வார்னருக்கு மெதுவான பந்தினை வீச அப்போது அதையும் பலமாக அடித்தார் வார்னர்.

warner 2

வார்னர் அடித்த அந்த பந்து நேராக சென்று பந்து வீச்சாளரின் தலையில் தாக்கியது இதனால் நிலைகுலைந்த பந்துவீச்சாளர் மயங்கி மைதானத்தில் விழுந்தார். இதனைக் கண்ட வார்னர் பந்து வீச்சாளரின் அருகே சென்று கலங்கியபடி கீழே உட்கார்ந்து அவரைத் தேற்றினார் பிறகு சிறிது நேரம் பயிற்சியை மேற்கொள்ளாமல் இருந்தார். அதன் பிறகு மீண்டும் பயிற்சி சிறிது நேரம் கழித்தே வந்து கலந்துகொண்டார். வார்னர் கண்கலங்கியபடி நின்றதற்கு காரணம் யாதெனில் அவரது நண்பரான ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் பில் ஹுக்ஸ் இதேபோன்று போட்டியில் பந்து தாக்கியதால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement