David Warner : ரோஹித் சர்மாவிற்கு அடுத்து இந்த சாதனை பட்டியிலில் இருப்பது வார்னர் தான் – விவரம் இதோ

உலககோப்பைத் தொடரின் 26வது போட்டி நேற்று நாட்டிங்ஹாம் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், மோர்தசா தலைமையிலான வங்கதேச அணியும்

warner
- Advertisement -

உலககோப்பைத் தொடரின் 26வது போட்டி நேற்று நாட்டிங்ஹாம் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், மோர்தசா தலைமையிலான வங்கதேச அணியும் மோதின.

aus ban

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 381 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வார்னர் 166 ரன்கள் அடித்தார். கவாஜா 89 ரன்கள் குவித்தார்.

பின்னர் 382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 333 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ரஹீம் 102 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

warner

நேற்றைய போட்டியில் 166 ரன்கள் அடித்து அதன் மூலம் வார்னர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி ஒருநாள் போட்டியில் அதிக முறை 150 ரன்களுக்கு மேற்பட்ட ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மாவுக்கு அடுத்த இடத்தில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். டேவிட் வார்னர் இதுவரை 6 முறை 150 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இந்திய அணியின் துவக்க வீரரான ரோகித் சர்மா 7 முறை 150 ரன்களுக்கு மேல் அடித்து முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement