வார்னரின் இந்த திடீர் ஓய்வு முடிவுக்கு இதுதான் காரணமாம் – விவரம் இதோ

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் அந்த அணிக்காக மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து போட்டிகளிலும் அந்த அணிக்கு முக்கியமானவராக இருக்கிறார். தனது நாட்டு அணிக்கு ஆடுவது போக உலகில் உள்ள அனைத்து டி20 கிரிக்கெட் லீக்கிலும் தொடர்ந்து ஆடி வருகிறார்.

warner

கடந்த ஓராண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய வார்னர் தடையில் இருந்து மீண்டு தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தடைக்கு பிறகு தொடர்ச்சியாக போட்டிகளில் ஆடிவரும் ஆவர் டி20 போட்டிகளில் சீக்கிரம் அவர் ஓய்வு எடுக்கப் போவதாக தெரிகிறது . இது குறித்து பேசிய டேவிட் வார்னர் கூறியதாவது :

டி20 சர்வதேச போட்டியில் விளையாடுவது பற்றி நான் யோசிக்க வேண்டும் . அடுத்தடுத்து இரண்டு உலகக் கோப்பையில் வேறு உள்ளன. இதன் காரணமாக டி20 கிரிக்கெட் கைவிட்டு விடலாம் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. அனைத்துவிதமான கிரிக்கெட்டிலும் ஆடுவது சற்று சுமையாக உள்ளது. விரேந்திர சேவாக், ஏபி டிவில்லியர்ஸ் போன்றவர்களிடம் இது பற்றிய ஆலோசனை கேட்டேன் . ஏன் என்றால் 3 வகையான போட்டிகளிலும் ஆடுவது பெரிய சவால்.

warner

எனக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர் . எனது வாழ்க்கை சீரான முறையில் செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அடுத்தடுத்த போட்டிகளால் தொடர்ச்சியாக சுற்றுப்பயணத்தில் இருக்க வேண்டும் அதனால் நான் ஒரு வடிவ கிரிக்கெட்டிற்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறேன். மேலும் டி20 போட்டிகளில் நான் வழிவிட்டால் அது இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்பதால் வார்னர் இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

- Advertisement -