டேவிட் வார்னரின் மகளுக்கு விராட் கோலியை போன்று ஆக ஆசையாம் – வைரலாகும் வார்னரின் மகள் பேட்டிங் வீடியோ

Warner

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி அதிரடி தொடக்க வீரரான டேவிட் வார்னர் பந்தை சேதப்படுத்தியதற்கு பின் தற்போது மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இணைந்து சிறப்பாக விளையாடி வருகிறார். அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது இன்று டேவிட் வார்னர் தனது மூன்றாவது மகள் இன்டிமே உடன் கிரிக்கெட் விளையாடும் ஒரு வீடியோ ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் டேவிட் வார்னர் மகள் இண்டிமே நான் விராத் கோலி என்று கூறிவிட்டு பந்தை விளாசும் காட்சியை பதிவாக்கி அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட வார்னர் எனக்கு இது பற்றி சரியாகத் தெரியாது இன்டி விராட் கோலி போல மாற ஆசையாம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அது அதிகளவு பகிரப்பட்டு வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.