நான் டெஸ்ட் போட்டியில் 335 ரன்கள் எடுத்து சாதிக்க காரணம் சேவாக் தான் – வார்னர் ஓபன் டாக்

Warner-1

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சில தினங்களுக்கு முன்னர் முடிவு பெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான வார்னர் முச்சதம் அடித்து அசத்தினார். மேலும் ஆட்டமிழக்காமல் 335 ரன்களை எடுத்திருந்தபோது ஆஸ்திரேலிய கேப்டன் டிக்ளேர் செய்தார்.

Warner

இன்னும் சற்று தாமதமாக டிக்ளேர் செய்திருந்தால் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் லாராவின் மிகப்பெரிய சாதனையான 400 ரன்களை கடந்து இருப்பார் என்று ரசிகர்கள் அனைவரும் ஆஸ்திரேலிய கேப்டன் பெயினை இணையத்தில் தொடர்ந்து வசைபாடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது டேவிட் வார்னர் தனது முச்சதம் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

ஐபிஎல் கிரிக்கெட்டில் நான் டெல்லி அணிக்காக விளையாடும் பொழுது சேவாக்கை சந்தித்தேன் அப்போது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் எப்போது என் ஆட்டத்தை பார்த்தாலும் டி20 ஆட்டத்தை விட அதிகமாக டெஸ்ட் போட்டிகளில் சாதிப்பேன் மேலும் சிறந்த வீரராக திகழ்வேன் என்று கூறுவார். ஆனால் நான் அப்போது சரியான மனநிலையில் இல்லை நான் நிறைய முதல் தர போட்டிகளில் விளையாடிய இல்லை என்றும் அவரிடம் கூறுவேன்.

warner 2

அப்போது சேவாக் என்னிடம் கூறியது யாதெனில் டெஸ்ட் போட்டிகளில் ஸ்லிப் மற்றும் கல்லி ஆகிய பகுதிகளில் தான் பில்டர்கள் அதிகமாக இருப்பார்கள் அவர்கள் அதிகமாக கவர் திசையில் நிற்க மாட்டார்கள். உன்னுடைய ஆட்டம் அதிரடியாக இருக்கிறது மேலும் கவர் திசைகளில் நீ அடித்து நொறுக்குகிறாய் எனவே உன்னால் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து என்று அதிரடியாக ஆட முடியும் நீ நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிப்பாய் என்று என்னை கூறிவார் அவரின் இந்த வார்த்தைகள் இன்று நிஜமாகி உள்ளன என்று வார்னர் கூறினார்.

- Advertisement -