ஆஸ்திரேலிய அணிக்கு புதிய கேப்டன். போட்டியில் இருக்கும் 2 நபர் – யாருக்கு வாய்ப்பு?

indvsaus
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்து வந்த ஆரோன் பின்ச் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால் அவரது இடம் ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய தொந்தரவை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் தொடர்ந்து மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவதை உணர்ந்த ஆரோன் பின்ச் சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து தானாக முன்வந்து ஓய்வை அறிவித்தார். அதனை தொடர்ந்து டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் அவர் நடப்புச் சாம்பியனாக எதிர்வரும் டி20 உலக கோப்பை அணியையும் வழிநடத்த இருக்கிறார்.

finch

- Advertisement -

இந்த உலகக் கோப்பை தொடர் முடிவடைந்ததும் டி20 கிரிக்கெட்டில் இருந்தும் அவர் ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியின் கேப்டனை தேர்வு செய்ய தற்போது கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இருந்த ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் அனுபவ வீரரான டேவிட் வார்னர் ஆகிய இருவரும் இந்த கேப்டன் பதவிக்கான போட்டியில் முன்னிலையில் இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் காரணமாக தடை செய்யப்பட்ட இருவரும் இனி கேப்டன் பதவி வகிக்க கூடாது என்று ஆஸ்திரேலியா நிர்வாகம் முடிவு செய்த வேளையில் அண்மையில் ஸ்மித் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

எனவே அவரை தொடர்ந்து தற்போது வார்னருக்கும் அவரின் மீது உள்ள தடையை நீக்கி ஒருநாள் அணியின் கேப்டனாக பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது. அதோடு உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் லீக்கில் கவனத்தை செலுத்தி வரும் டேவிட் வார்னரை சமாதானப்படுத்தி அவரை ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக மாற்றவும் கிரிக்கெட் வாரியம் முயற்சி செய்து வருவதாக தெரிகிறது.

- Advertisement -

ஏற்கனவே ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று கோப்பையை பெற்று கொடுத்த டேவிட் வார்னர் நிச்சயம் ஆஸ்திரேலியா அணிக்கும் கேப்டனாக சிறப்பாக செயல்படுவார் என்று கருதும் நிர்வாகமானது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு அவரை ஒருநாள் அணையின் கேப்டனாக மாற்றலாம் என்று முயற்சிக்க உள்ளது.

இதையும் படிங்க : 2022 டி20 உ.கோ’யில் சுமாரான பார்மில் களமிறங்கப் போகும் மோசமான கனவு 11 பேர் அணி – வித்யாச பதிவு

இந்த கேப்டன் பொறுப்புக்கான போட்டியில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் இருப்பதாகவும் அது குறித்து அதிகாரபூர்வ முடிவு இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement