ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் பெஸ்ட் தான். அதேபோல் கோலி இவை அனைத்திலும் பெஸ்ட் – வார்னே பேட்டி

Warne
- Advertisement -

ஸ்டீவ் ஸ்மித் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். மேலும் விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி டெஸ்ட் பேட்ஸ்மேன் தர வரிசைப் பட்டியலில் அவர் முதலிடத்தையும் தற்போது பிடித்துள்ளார்.

Smith

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான வார்னே தற்போது ஸ்மித் மற்றும் கோலி ஆகியோர் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் தலை சிறந்த பேட்ஸ்மேன் தான் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். மேலும் அவர் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை டெஸ்ட் போட்டிகளில் வெளிப்படுத்தி வருகிறார். அவரது தொடர்ச்சியான இந்த சிறப்பான ஆட்டம் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பங்கு வகிக்கிறது.

டெஸ்ட் போட்டியில் அவர் சிறந்த வீரராக வலம் வருகிறார். அதேபோன்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தனது அசாத்திய திறமை காரணமாக சிறந்து விளங்குகிறார். என்னை பொருத்தவரை கோலி மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தனது கவனத்தை சிதற விடாமல் ரன்களை குவித்து தனது சிறப்பான ஆட்டத்தை தனது திறமையின் மூலம் அதைத் தொடர்ந்து தக்க வைத்து வருகிறார்.

Kohli

எனவே ஸ்மித்தை டெஸ்ட் போட்டிகளிலும், விராட் கோலியை மூன்று வகை கிரிக்கெட்டிலும் நான் சிறந்த வீரர் என்று கூறுவதில் தவறு ஏதும் இல்லை என்று நான் கருதுகிறேன் என்று வார்னே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement