ஸ்மித் செய்தது சரிதான். அம்பயர்களுக்கு பர்ஸ்ட் ரூல்ஸ் புக் குடுங்க. ஸ்மித்துக்கு ஜால்றா அடித்த – ஷேன் வார்ன்

Smith-2
- Advertisement -

ஆஸ்திரேலிய அணி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத இறுதியில் கிறிஸ்மஸ் தினத்தின் மறுநாள் விளையாடும் டெஸ்ட் போட்டி “பாக்ஸிங் டே டெஸ்ட்” போட்டி என்று அழைக்கப்படும். தொடர்ந்து ஆண்டுதோறும் நடந்து வரும் இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 32 ஆண்டுகளுக்கு பிறகு மெல்போர்ன் மைதானத்தில் நியூசிலாந்து அணி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 467 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஹெட் சிறப்பாக விளையாடி(114) சதமடித்தார். ஸ்மித் 84 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து தற்போது நியூசிலாந்து தனது முதல் இன்னிங்க்ஸை ஆடிவருகிறது.

இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெறும் இந்த போட்டியில் சண்டைக்கும் பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. ஏனெனில் நியூசிலாந்து வீரர் வாக்னர் நேற்று வீசிய ஒரு பந்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் அடிக்காமல் தனது முதுகில் அடிவாங்கி ஒரு ரன் ஓட முயற்சித்தார். ஆனால் அதனை அம்பயர் “டெட்பால்” என்று அறிவித்தார். அதன் பிறகு அதே ஓவரில் மீண்டும் 5 ஆவது பந்தில் அடி வாங்கி ஒரு ரன் ஓட ஸ்மித் முற்பட்ட போதும் அம்பயர் “டெட்பால்” என்று அவர் அறிவித்தார்.

இதனால் ஸ்மித்துக்கும் அம்பயருக்கும் சிறிய அளவில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஸ்மித் அம்பயரை நோக்கி தனது ஆதங்கத்தை கை அசைவின் மூலம் தெரிவித்தார். ஆனால் அம்பயர் ஐசிசியின் விதிமுறைப்படியே டெட்பால் வழங்கியுள்ளார். அதன்படி 23.2.1 என்ற விதியின்படி ஒரு பேட்ஸ்மேன் பந்தை அடிக்க முற்படவேண்டும் இல்லையெனில் அடிபடாமல் காப்பதற்காக பந்தை விட்டு விலக வேண்டும். இதை இரண்டையும் தவிர்த்து வேண்டுமென்றே பந்தை உடம்பால் தடுத்து ரன் ஓடக்கூடாது. இந்த விதியின் படியே அம்பயர் “டெட்பால்” அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில் இந்த “டெட்பால்” விவகாரம் குறித்து பேட்டியளித்த ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே கூறியதாவது : ஸ்மித் செய்தது சரிதான். அவர் பந்தை தவிர்க்கவே அந்த முயற்சியை செய்தார். அம்பயரின் முடிவுதான் தவறானது இடைவேளையின் போது அவர்களுக்கு ரூல்ஸ் புக் அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறேன். என்று ஸ்மித்துக்கு ஆதரவாகவும் அம்பயரின் முடிவை கிண்டலாகவும் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement