கொரோனா வைரஸ் எதிரொலி : ஷேன் வார்ன் செய்த மிகப்பெரிய உதவி – ரசிகர்கள் வரவேற்பு

warne
- Advertisement -

உலக அளவில் கரோனா வைரஸ் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் பாதிப்பைக் கட்டுப்படுத்த உலக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உள்ளனர். இதுவரை 3 லட்சம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் 11 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

corona 1

- Advertisement -

இதில் அதிகபட்சமாக இத்தாலியில் 4000 பேர் சீனாவில் 3000 பேரும் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். இந்தியாவில் 250 பேருக்கு இந்த பாதிப்பு உள்ளது. ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரசை கட்டுப்படுத்த கையை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே தன்னுடைய மதுபான ஆலையில் ஜின் தயாரிப்பதை நிறுத்தி விட்டு சானிடைசர் தயாரிக்கும் பணியை துவங்க உத்தரவிட்டுள்ளார்.

Warne 1

ஏனெனில் இந்தச் சானிடைசர் மருத்துவமனைகளுக்கு உதவும் வகையில் 70 சதவீதம் ஆல்கஹால் கலந்த சானிடைசரை அதிகமாக உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னுக்கு சொந்தமான மதுபான ஆலையில் தற்போது மதுபானம் தயாரித்தது நிறுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

அதற்கு பதில் கையை சுத்தப்படுத்தும் சானிடைசர் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இதனை அரசாங்கத்திற்கு வழங்கவும் அவர் முடிவுசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் இந்த முடிவு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Warne

இந்தியாவிலும் இன்று (ஞாயிறு) முழுவதும் மக்கள் வெளியில் வராமல் கொரானா வைரசுக்கு எதிராக தங்களது ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement