KXIP vs SRH : 150 ரன்கள் வெற்றிக்கு போதும். இதை வைத்து போட்டியை வெல்ல முடியும் – வார்னர் நம்பிக்கை

ஐ.பி.எல் தொடரின் 22 ஆவது போட்டி மொஹாலி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும்

warner
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 22 ஆவது போட்டி மொஹாலி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.

Bhuvi

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை அடித்தது இதனால் பஞ்சாப் அணிக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சன் அணி சார்பில் துவக்க வீரரான டேவிட் வார்னர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 62 பந்துகளில் 70 ரன்களை அடித்தார். இதில் 6 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். இந்நிலையில் முதல் பேட்டிங் முடிந்து டேவிட் வார்னர் பேட்டி ஒன்றினை அளித்தார்.

warnerfier

அதில் வார்னர் கூறியதாவது : எங்கள் அணிக்கு இந்த இலக்கு போதுமானது. இந்த மைதானத்தின் எல்லைகள் பெரியது. மேலும், எங்களது அணியின் பவுலர்கள் அனைவரும் தலைசிறந்த பவுலர்கள் எனவே நாங்கள் அடித்த இந்த ரன்கள் வெற்றிக்கு சவாலான இலக்காகவே இருக்கும் என்றே நினைக்கிறன்.

rashid-khan

மேலும், ரஷீத் கான் மற்றும் நபி போன்ற திறமையான ஸ்பின்னர்கள் எங்கள் அணியில் உள்ளனர். அவர்கள் மூலம் துவக்க வீரர்களை விரைவில் வீழ்த்தினால் எங்களின் வெற்றி உறுதி என்றே நான் கூறுவேன் என்று வார்னர் தெரிவித்தார்.

Advertisement