இந்தியா அதுல சூப்பர்.. தட்டில் வெச்சு வெற்றியை கொடுத்தும் பாகிஸ்தான் சொதப்பிட்டாங்க.. வகார் யூனிஸ்

Waqar Younis
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியிடம் பாகிஸ்தான் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜூன் ஒன்பதாம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வெறும் 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்தியா ஆல் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தது.

அதன் காரணமாக பாகிஸ்தான் கண்டிப்பாக வெல்லும் என்று நம்பப்பட்டது. ஆனால் 120 ரன்களை துரத்திய பாகிஸ்தான் ஆரம்பம் முதலே இந்திய அணியின் தரமான பந்து வீச்சில் அதிரடியாக விளையாட முடியாமல் 20 ஓவரில் 113/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் டி20 கிரிக்கெட்டில் ஆல் அவுட்டான போட்டியில் முதல் முறையாக இந்தியா வெற்றி பெற்று சாதனை படைத்தது.

- Advertisement -

தட்டில் வெற்றி:
இந்திய அணிக்கு பேட்டிங்கில் அதிகபட்சமாக ரிஷப் 43, அக்சர் பட்டேல் 20 ரன்களும் பந்து வீச்சில் ஜஸ்ப்ரித் பும்ரா 3, ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். மறுபுறம் ஏற்கனவே கத்துக்குட்டியான அமெரிக்காவிடம் அவமான தோல்வியை பதிவு செய்த பாகிஸ்தான் தற்போது பரம எதிரியான இந்தியாவிடமும் வீழ்ந்துள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் 119க்கு சுருண்ட இந்தியா வெற்றியை வெற்றிலை பாக்கு தட்டில் வைத்து கொடுத்ததாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வகார் யூனிஸ் தெரிவித்துள்ளார். ஆனால் அதைக் கூட பெற முடியாத அளவுக்கு சொதப்பிய பாகிஸ்தானை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார். மறுபுறம் இந்திய அணியின் பேலன்ஸ் சமமாக இருப்பதாலேயே வென்றதாக பாராட்டும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பேட்டிங்கில் சுமாராக செயல்பட்ட இந்தியா இப்போட்டியில் எளிதாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பாகிஸ்தானுக்கு கொடுத்தது. அவர்களால் எளிதாக 140 – 150 ரன்கள் அடித்திருக்க முடியும். ஏனெனில் கடைசியில் 7 விக்கெட்டுகளை இழப்பது வெற்றிக்கு உதவாது. ஆனால் இந்தியா பேலன்ஸ் நிறைந்த அணியாக இருக்கிறது. அதனால் பேட்டிங்கில் அசத்தவில்லை என்றாலும் நம்மிடம் பும்ரா, சிராஜ், ஜடேஜா போன்ற நல்ல பவுலர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்தியா அறிவார்கள்”

இதையும் படிங்க: என்னையா கிண்டலடிச்சீங்க.. புவி, உமர் குல்லை முந்திய ஹர்டிக் பாண்டியா.. இந்தியாவுக்காக புதிய சாதனை

“அதே போல அவர்கள் ஃபீல்டிங்கையும் கவர் செய்தனர். அதுவே அவர்களை சூப்பர் அணியாக உருவாக்கியுள்ளது. பாகிஸ்தான் இந்த போட்டியை கூட வெல்லாவிட்டால் நான் என்ன சொல்ல முடியும்? இந்த போட்டியில் வெற்றி தட்டில் வைத்து கொடுக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அதை கீழ சிந்தியது. பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களிடமிருந்து இது மோசமான செயல்பாடு. ஆரம்பத்தில் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர்கள் ஃபினிஷிங் செய்யவில்லை” என்று கூறினார்.

Advertisement