என்னையா கிண்டலடிச்சீங்க.. புவி, உமர் குல்லை முந்திய ஹர்டிக் பாண்டியா.. இந்தியாவுக்காக புதிய சாதனை

Hardik Pandya 3
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. ஜுன் ஒன்பதாம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 120 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதனால் இந்தியா தோல்வியை சந்திக்கும் என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் பந்து வீச்சில் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா 20 ஓவரில் பாகிஸ்தானை 113/7 ரன்களுக்கு சுருட்டி த்ரில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு பேட்டிங்கில் ரிஷப் பண்ட் 43, அக்சர் படேல் 20 ரன்கள் எடுத்த நிலையில் பந்து வீச்சில் ஜஸ்ப்ரித் பும்ரா 3, ஹர்டிக் பாண்டியா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக ஆல் அவுட்டான போட்டியில் வெற்றியை பெற்று இந்திய கிரிக்கெட் அணி சாதனை படைத்தது.

- Advertisement -

பாண்டியாவின் சாதனை:
அந்த வகையில் இப்போட்டியில் அனைவருமே வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய நிலையில் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் வெறும் 7 (12) ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தை கொடுத்தார். அப்போது இவர் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடுவதற்கு சரிபட்டு வருவார் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஏனெனில் சமீப காலங்களாகவே ஐபிஎல் தொடரில் முழுமையாக விளையாடும் அவர் இந்திய அணிக்காக காயமடைந்து சரியாக விளையாடவில்லை.

அந்த நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்திலும் சொதப்பிய அவர் கேப்டனாகவும் சுமாராக செயல்பட்டு மும்பையின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த பாண்டியா இப்போட்டியில் பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்து வீச்சில் 4 ஓவரில் 24 ரன்கள் கொடுத்து ஃபகார் ஜமான், சடாப் கான் ஆகிய 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

இதையும் சேர்த்து பாகிஸ்தானுக்கு எதிராக அவர் மொத்தம் 6 டி20 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் வாயிலாக பாகிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற புதிய சாதனையும் ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார். இதற்கு முன் புவனேஸ்வர் குமார் 11 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அது போக இந்தியா – பாகிஸ்தான் மோதிய டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர் என்ற சாதனையும் ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார்.

இதையும் படிங்க: மூளைய யூஸ் பண்ணல.. இதை செஞ்சுருந்தா ஈஸியா இந்தியா மண்ணை கவ்வ வெச்சிருக்கலாம்.. சோயப் அக்தர்

இதற்கு முன் புவனேஸ்வர் குமார் மற்றும் உமர் குல் ஆகியோர் தலா 11 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் தன்னை விமர்சித்தவர்களுக்கும் கிண்டலடித்தவர்களுக்கும் இப்போட்டியில் பாண்டியா பந்து வீச்சில் பதிலடி கொடுத்துள்ளார். அடுத்து வரும் போட்டிகளில் அவர் பேட்டிங்கிலும் அசத்துவார் என்று நம்பலாம்.

Advertisement