MS Dhoni : தல தோனியை மறைமுகமாக தாக்கி பேசிய வக்கார் யூனிஸ் – விவரம் இதோ

இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியை இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி பாகிஸ்தான்

Waqar-younis
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியை இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி பாகிஸ்தான் ரசிகர்களும் ஆர்வத்துடன் கண்டனர்.

Ind vs Eng

- Advertisement -

ஏனெனில் இந்திய அணி இங்கிலாந்து அணி வென்றால் பாகிஸ்தான் அணிக்கு அரை இறுதி வாய்ப்பு பிரகாசமாகும் என்பதால் பாகிஸ்தான் ரசிகர்கள் பெருமளவில் இந்திய அணிக்கு ஆதரவு கொடுத்தனர். ஆனாலும் நேற்றைய போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக தோனி மற்றும் ஜாதவின் பொறுமையான ஆட்டம் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான வக்கார் யூனிஸ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறிய அவர் கூறியதாவது : இது நீங்களே இல்லை உங்களது அணிக்கு இது போன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலை இருந்தால் நீங்கள் இப்படி விளையாடி இருப்பீர்களா ?

Jadhav

இந்த தொடரில் பாகிஸ்தான் அரையிறுதி போட்டிக்கு செல்கிறதோ ? இல்லையோ ? என்று நான் கவலைப்படவில்லை. ஆனால் விளையாட்டு நெறியிலிருந்து சில சாம்பியன்கள் கூட தோற்று விட்டனர். என்று தோனியை மறைமுகமாக சுட்டிக் காட்டி அவர் தோனியை தாக்கி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement