சோக் பண்ண காலம் மாறிடுச்சு, அந்த 3 பேர் அதிசயம் நிகழ்த்துவாங்க – 2023 உ.கோ இந்தியா பாக் போட்டி பற்றி வக்கார் யூனிஸ் ஓப்பன்டாக்

Waqar Younis
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் துவங்க உள்ளது. அதில் வெளிநாடுகளில் தடுமாறினாலும் சொந்த மண்ணில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் அணியாக கருதப்படும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதற்கு நிகராக பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் போட்டியிலும் வென்று கடந்த 30 வருடங்களாக வென்று வரும் கௌரவத்தையும் இந்தியா காப்பாற்றுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் நிலவுகிறது.

மறுபுறம் உலக கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை 1992 முதல் இதுவரை சந்தித்த 7 போட்டிகளிலும் தொடர் தோல்விகளை பரிசளித்து வரும் இந்தியாவை இம்முறை அவர்களுடைய சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வரலாற்றில் சந்தித்த அனைத்து தோல்விகளுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே பாகிஸ்தான் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. இருப்பினும் இதுவரை உலகக் கோப்பையில் வீழ்த்த முடியவில்லை என்ற அழுத்தத்தை கொண்டுள்ள பாகிஸ்தான் அணியில் இருக்கும் தற்போதைய பாபர் அசாம் போன்ற வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடாத அனுபவத்தை கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

காலம் மாறிடுச்சு:
அதனால் இந்த உலகக் கோப்பையில் இந்தியாவின் கால சூழ்நிலைகள் பாகிஸ்தான் அணிக்கு புதிதாகவும் சவால் நிறைந்ததாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த அழுத்தம் மற்றும் சவாலை தாண்டி 2017 சாம்பியன்ஸ் ட்ராபி, 2021 டி20 உலக கோப்பை, 2022 ஆசிய கோப்பை போன்ற சமீபத்திய தொடர்களில் வென்றது போல இம்முறை உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சோக் செய்த கடந்த காலங்கள் தற்போது மாறி விட்டதாக தெரிவிக்கும் அவர் பாபர் அசாம், ஷாஹின் அப்ரிடி, பகார் ஜமான் ஆகியோர் அதிசயம் நிகழ்த்தி பாகிஸ்தானுக்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “எங்களுடைய காலங்களில் இருப்பது போல அழுத்தம் என்பது பெரிய பிரச்சனையாக இருந்ததில்லை. இருப்பினும் ஒரு குறிப்பிட்ட பெரிய அணிக்கு எதிராக நீங்கள் குறைவாக விளையாடும் போது அழுத்தம் ஏற்படுகிறது. அது பாகிஸ்தான் மற்றும் இந்தியா மோதும் போட்டிகளில் 3 மடங்காக இருக்கிறது”

- Advertisement -

“அந்த வகையில் தற்போது அழுத்தம் என்பது உச்சகட்டமாக இருக்கிறது. ஆனால் எங்களுடைய காலகட்டங்களில் நாங்கள் இந்தியாவுடன் அதிக போட்டிகளில் விளையாடிய காரணத்தால் குறைவான அழுத்தமே இருந்தது. ஆனாலும் உலகக் கோப்பை போட்டிகளில் நாங்கள் இந்தியாவுக்கு எதிராக சோக் செய்தோம். இருப்பினும் தற்போதுள்ள வீரர்கள் முன்பை விட அழுத்தத்தை சிறப்பாக கையாள்கிறார்கள். குறிப்பாக அழுத்தத்தை சிறப்பாக கையாண்டு வெற்றியை பெற்றுக் கொடுக்கும் அளவுக்கு தற்போது எங்களிடம் மேட்ச் வின்னர்கள் நிறைந்திருக்கின்றனர்”

“சமீப காலங்களில் பாகிஸ்தான் அணி அழுத்தத்தை மிகவும் சிறந்த வகையில் கையாண்டுள்ளது. என்னைப் பொறுத்த வரை நீங்கள் இந்தியா அல்லது பாகிஸ்தான் உட்பட எங்கு விளையாடினாலும் உங்களுடைய செயல்பாடுகளை பின்பற்றி சரியான திட்டங்களை வகுத்து அதை சரியாக செயல்படுத்தினால் வெற்றி பெறுவதற்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. மேலும் தற்போதைய அணியில் எங்களிடம் மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள்”

- Advertisement -

“குறிப்பாக பாபர் அசாம், ஷாஹுன் அப்ரிடி, பக்கார் ஜமான் போன்ற தனி ஒருவனாக அதிசயத்தை நிகழ்த்தி வெற்றியை பெற்றுக் கொடுக்கும் வீரர்கள் நிறைந்திருக்கின்றனர். அதேபோல இமாம் சிறந்த இன்னிங்ஸ் விளையாடுவதை நாம் பார்க்கிறோம். எனவே அனைத்து துறைகளிலும் அசத்தும் அளவுக்கு பாகிஸ்தானிடம் தேவையான வீரர்கள் இருக்கின்றனர். அதனால் அழுத்தத்தை அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கையாள்வதில் மட்டுமே வெற்றி இருக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க:எல்லாத்தையும் பாத்த இங்கிலாந்து அடுத்ததா இந்தியாவையும் அடக்கி ஆளும் – நாசர் ஹுசைன் நம்பிக்கை, விவரம் இதோ

முன்னதாக ஆசிய கோப்பை விவகாரத்தில் இந்த உலகக் கோப்பையில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என்று பாகிஸ்தான் ஒருபுறம் கருத்துக்களை தெரிவித்து வருகிறது. அந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணையின் படி அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடப்பதாக இருந்த இவ்விரு அணிகள் மோதும் போட்டி வேறு தேதிக்கு மாற்றப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement