கத்துக்குட்டியை அடிச்சா போதுமா ! அவங்களோட மோதி நிரூபிங்க – ரோஹித்துக்கு சவால் விடுத்த பிராட் ஹாக்

Hogg
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் அபாரமாக செயல்பட்ட இந்தியா அடுத்தடுத்த வைட்வாஷ் வெற்றிகளை பதிவு செய்து அசத்தியது. இலங்கையின் இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடந்த டி20 தொடரில் அதிரடியாக விளையாடிய இந்தியா 3 – 0 என கோப்பையை வென்றது. அதன்பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஓர் அங்கமாக நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் அபாரமாக செயல்பட்ட இந்தியா 2 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

IND

- Advertisement -

இப்படி சொந்த மண்ணில் இந்த அடுத்தடுத்த தொடர்களில் அதிரடியாக செயல்பட்ட இந்திய வீரர்கள் வெற்றியை ருசித்த பின் தற்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக தயாராகி வருகின்றனர். இந்த இலங்கை தொடர் முதல் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா தலைமையில் தனது புதிய பயணத்தை தொடங்கிய இந்தியா வெற்றிநடை போடத் துவங்கியுள்ளது என்றே கூறலாம்.

சொந்த மண்ணில் மிரட்டிய ரோஹித் சர்மா:
கடந்த நவம்பர் மாதம் முதல் முறையாக முழு நேர டி20 கேப்டனாக பொறுப்பேற்ற அவரிடம் கடந்த டிசம்பர் மாதம் ஒருநாள் கேப்டன் பதவியும் ஒப்படைக்கப்பட்டது. அந்த வேளையில் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக இருந்த விராட் கோலி திடீரென பதவி விலகியதை அடுத்து டெஸ்ட் போட்டிகளுக்கும் அவர் கேப்டனாக செயல்பட துவங்கியுள்ளார். முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பின் கடந்த நவம்பர் மாதம் முதல் இப்போது வரை சொந்த மண்ணில் இந்தியாவை 14 போட்டிகளில் வழிநடத்திய அவர் அந்த 14 போட்டிகளிலும் தோல்வியடையாமல் 100% சதவீத வெற்றிகளை பதிவு செய்து 5 வைட்வாஷ் கோப்பைகளை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்துள்ளார். மொத்தத்தில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா ஆரம்பத்திலேயே அமர்க்களமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

Rohith-1

கத்துக்குட்டிகளை அடித்தால் போதுமா:
இருப்பினும் இதுவரை வெஸ்ட்இண்டீஸ், இலங்கை போன்ற கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராக அதுவும் சொந்த மண்ணில் மட்டுமே ரோஹித் சர்மா கேப்டன்ஷிப் செய்துள்ளார். இந்நிலையில் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள அவர் இலங்கை போன்ற கத்துக்குட்டிகளுக்கு எதிராக வெற்றி பெற்றால் மட்டும் போதாது என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றிய தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது ரோகித் சர்மாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். அவரை அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளில் பார்க்க விரும்புகிறேன். ஏனெனில் அது போன்ற கடினமான சூழ்நிலைகளிலும் அவர் இப்போது போலவே கூலாக இருப்பாரா அல்லது பதட்டப் படுவாரா? என்பதை பார்க்க வேண்டும்.

Rohith-1

மேலும் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் வழிநடத்த உள்ள அவர் அதன்பின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கேப்டன்ஷிப் செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் இந்தியாவை வழிநடத்த வேண்டும். எனவே அழுத்தம் நிறைந்த கிரிக்கெட் தொடர்கள் இனிமேல்தான் வர உள்ளது” என கூறினார்.

இனிமேல் தான் சவால் இருக்கு:
அவர் கூறுவது போல இதுநாள் வரை இலங்கை போன்ற பலம் குறைந்த அணிகளை பந்தாடிய ரோகித் சர்மாவுக்கு இனிமேல் தான் மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கிறது என்றே கூற வேண்டும். ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளி பட்டியலில் தற்போது 4-வது இடத்தில் உள்ள இந்தியா அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அந்த 4 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

Rohith

அத்துடன் இங்கிலாந்துக்கு செல்லும் இந்தியா அங்கு அந்த அணிக்கு எதிராக விளையாடி விட்டு பின் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாட உள்ளது. பொதுவாக களத்தில் கூலாக காட்சி அளிக்கும் ரோஹித் சர்மா வரும் காலங்களில் வெளிநாடுகளில் நடைபெற இருக்கும் டி20 உலககோப்பை மிகப்பெரிய தொடர்களில் இதே போலவே செயல்பட்டு சவாலை சமாளித்து இந்தியாவிற்கு வெற்றியைத் தேடித் தருவாரா என்பதை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

Advertisement