- Advertisement -
ஐ.பி.எல்

இந்திய அணிக்கெதிரான டி20 தொடர் முடிந்ததும் 2 ஐ.பி.எல் அணிகள் என்னை அணுகினார்கள் – ஹசரங்கா

இலங்கை அணியை சேர்ந்த 24 வயதான சுழற்பந்துவீச்சாளர் ஹசரங்கா கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக அறிமுகமாகி இதுவரை 26 ஒருநாள் போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள், 22 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை காட்டிலும் டி20 போட்டிகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக வீரராக பார்க்கப்படும் ஹசரங்கா தொடர்ச்சியாக இலங்கை அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக நடைபெற்று முடிந்த இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு தொடர்நாயகன் விருதையும் வென்றார்.

ஐசிசி t20 கிரிக்கெட் பவுலர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஹசரங்கா இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். அண்மையில் நடைபெற்று முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

- Advertisement -

இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக இவரே திகழ்ந்தார். 7 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் கடைசி டி20 போட்டியின் போது பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக பந்துவீசி அனைவரது கவனைத்தையும் ஈர்த்த ஹசரங்காவின் பந்துவீச்சு பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் லசித் மலிங்கா உடன் நடைபெற்ற ஒரு யூடியூப் பேட்டியில் ஹசரங்கா இந்த இந்திய தொடர் முடிந்ததும் 2 ஐபிஎல் அணிகள் தன்னை அணியில் இணைப்பதற்காக அணுகினர் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய தொடர் முடிந்ததும் நிச்சயம் ஐபிஎல் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன். நான் நினைத்தது போலவே என்னை இரண்டு ஐ.பி.எல் அணிகள் அணுகின. மேலும் விரைவில் நிச்சயம் நான் ஐபிஎல் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். அப்போது மிகப்பெரிய தொகைக்கு நான் ஏலம் போவேன் என்று கூறியுள்ளார். ஆனால் அவரை அணுகிய இரண்டு அணிகள் எந்த அணிகள் என்று அவர் பகிரவில்லை.

இருப்பினும் நிச்சயம் அவரை விராட் கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வாங்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஆடம் ஜாம்பாவிற்கு பதிலாக சுழற்பந்து வீச்சோடு சேர்த்து பேட்டிங்கும் செய்யக்கூடிய ஒரு வீரரை தேடிக்கொண்டிருந்த பெங்களூர் அணிக்கு இவர் சிறந்த தேர்வாக இருப்பார் என்பதால் பெங்களூர் அணிக்காக அவர் விளையாட அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by