அவர்கிட்ட திறமை நிறையவே இருக்கு. ஆனாலும் இதுவரை அவரு பெருசா எதும் பண்ணல – இளம்வீரர் குறித்து வாஹப் ரியாஸ் கருத்து

Wahab-Riaz
- Advertisement -

2023-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளை முல்தான் நகரில் துவங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த தொடரில் மிகச் சிறந்த பவுலிங் யூனிட் கொண்ட அணியாக பார்க்கப்படும் பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.

அந்த அணியில் ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் சமீபத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதால் நிச்சயம் ஆசிய கோப்பை தொடரிலும் அவர்களது பந்துவீச்சு மிரட்டலாக இருக்கும் என்று பேசப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாஹப் ரியாஸ் அளித்த பேட்டி ஒன்றில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த இளம் வீரர் நசீம் ஷா அவரது திறமைக்கு ஏற்ப இன்னும் சிறப்பாக செயல்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நசீம் ஷா தற்போது மிகச் சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஆனால் அவரிடம் உள்ள திறமைக்கு ஏற்ப பெரிய அளவில் அவர் இன்னும் தனது செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை.

மிடில் ஓவர்களில் அவர் இன்னும் அவர் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். ஷாஹீன் அப்ரிடி புதுப்பந்தில் அற்புதமான பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். அதேபோன்று ஹாரிஸ் ரவுப் கடைசி கட்ட ஓவர்களில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். எனவே நசீம் ஷா 25 முதல் 30 ஓவர்கள் வரை தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த வேண்டும்.

- Advertisement -

அவரிடம் அதற்கான அனைத்து திறமைகளையும் உள்ளதாகவே நான் நினைக்கிறேன். ஏனெனில் 16 வயதினிலே அறிமுகமான அவர் தற்போது 20 வயதை எட்டி இருக்கும் வேளையில் இந்த குறுகிய வருடங்களிலேயே நல்ல அனுபவத்தை பெற்றிருக்கிறார். அதோடு உலகின் பல்வேறு லீக் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வரும் அவர் பல்வேறு விதமான வீரர்களுடன் தனது நேரத்தை செலவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : 2023 ஆசிய கோப்பையில் வெல்லப்போவது இந்தியாவா – பாகிஸ்தானா? முகமது ரிஸ்வான் கொடுத்த நேர்மையான பதில் இதோ

எனவே நிச்சயம் அவர் இதையெல்லாம் கருத்தில் கொண்டு இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் அவருக்கு அந்த தகுதி இருப்பதாகவும் கூறியுள்ளார். 20 வயதான நசீம் ஷா கடந்த 2022-ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement