டி20 உலகக்கோப்பை தொடரில் இந்த அணியால் எல்லா அணிகளையும் வீழ்த்த முடியும் – வஹாப் ரியாஸ்

Wahab
- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது இங்கு பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Cup

- Advertisement -

அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான வஹாப் ரியாஸ் இந்த டி20 உலக கோப்பை தொடர் குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : பாகிஸ்தான் அணியால் இந்த டி20 தொடரில் எந்த ஒரு அணியும் வீழ்த்த முடியும்.

பாகிஸ்தான் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் இந்தியா மட்டுமல்ல மற்ற அனைத்து அணிகளையும் அவர்கள் வீழ்த்துவார்கள். இந்த உலகக் கோப்பைத் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவதால் பாகிஸ்தான் அணிக்கு அது ஒரு கூடுதல் அனுகூலத்தை தரும் என்று ரியாஸ் கூறியுள்ளார்.

wahab riaz

அதுமட்டுமின்றி அவர் தொடர்ந்து கூறுகையில் : கடந்த பல ஆண்டுகளாகவே நாங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நிறைய போட்டிகளில் விளையாடி உள்ளோம். அதனால் அங்குள்ள சூழ்நிலை மற்றும் தன்மை ஆகிய அனைத்தும் எங்களுக்கு தெரியும். நிச்சயம் ஐக்கிய அரபு அமீரக மைதானங்கள் பாகிஸ்தான் அணிக்கு கைகொடுக்கும்.

Pak-1

இந்த டி20 உலக கோப்பை தொடரை வெல்லும் அளவிற்கு பாகிஸ்தான் அணிக்கு வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கை இப்போதும் எனக்கு உள்ளது. இந்த உலக கோப்பை தொடரை வெல்ல பலமான அணிகளுடன் நிச்சயம் பாகிஸ்தான் அணியும் பலமான போட்டியை தரும் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement