ஓய்வில் இருந்து மீண்டுவரும் நட்சத்திர வீரர். சம்பவம் செய்வேன் என்று சபதம் – விவரம் இதோ

Wahab-riaz-2
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான வாகப் ரியாஸ் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமானார். இவர் அறிமுகமான முதல் தொடரே இங்கிலாந்து தொடராகும் அந்த தொடரில் தனது அதிவேக பவுன்சர் மற்றும் வித்தியாசமான டெக்னிக் மூலம் சிறப்பாக பந்துவீசி இங்கிலாந்து வீரர்களை திணறடித்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

wahab riaz 1

- Advertisement -

இப்படி தனது கேரியரை சிறப்பாக ஆரம்பித்த வாகப் ரியாஸ் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. மேலும் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த வாகப் ரியாஸ் கடந்து 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் விளையாடாமல் இருந்தார் ஆனால் பாகிஸ்தான் அணி நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று அந்த தொடரில் விளையாடிய வாகப் ரியாஸ் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் வாரியத்திடம் அறிவித்து இருந்தார். ஆனால் நீங்கள் முன்கூட்டியே ஓய்வினை எடுக்கிறீர்கள் இது அணிக்கு நல்லது அல்ல உங்கள் ஓய்வு தள்ளிப் போடுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். ஆனால் அப்போது நான் ஓய்வு பெற்றுவிட்டேன்.

wahab riaz

தற்போது மீண்டும் பாகிஸ்தான் அணியில் விளையாட தயாரா ? என்று கிரிக்கெட் நிர்வாகத்திடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. உடனே நான் எனது தாய் நாட்டிற்காக விளையாடுவதே முக்கியம் என்று கூறி விருப்பம் கூறிவிட்டேன். தற்போது மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

- Advertisement -

மேலும் இந்த ஓய்வு அறிவிப்பை திரும்பப் பெற்ற பிறகு இதுகுறித்து பேசிய வாகப் ரியாஸ் கூறும் போது : பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகிகள் எனது ஓய்வு அறிவிப்பை தள்ளிப் போடச் சொன்னார்கள் அதை நான் ஏற்றுக்கொண்டேன். மறுபடியும் பாகிஸ்தான் அணிக்கு திரும்பும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. எனது தாய் நாட்டிற்காக விளையாடுவது எனக்கு கிடைத்த மிகவும் பெருமை.

riaz

அணிக்கு மீண்டும் திரும்புவதில் சற்றும் கூட யோசிக்காமல் ஓய்வு அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொண்டேன். பாகிஸ்தான் அணியி.ன் வெற்றிக்கு என்னுடைய பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மேலும் தனது சொந்த காரணங்களுக்காக இங்கிலாந்து தொடரை புறக்கணித்த அமீரின் இழப்பை ஈடுகட்டும் வகையில் வாகப் ரியாஸ் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். இதுவரை அவர் 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 83 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement