அதிரடியாக தனது ஓய்வு முடிவை அறிவித்த பாகிஸ்தான் – நட்சத்திர வீரர்

Wahab-riaz-2
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான வகாப் ரியாஸ் தற்போது பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வு முடிவை அதிரடியாக அறிவித்துள்ளார்.

wahab riaz 1

- Advertisement -

2010-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான வகாப் ரியாஸ் கடைசியாக 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடினார். 2017ஆம் ஆண்டில் இருந்து அவருக்கு வாய்ப்புகள் மிகக்குறைவாக வழங்கப்பட்டன. மேலும் கடந்த 2 ஆண்டுகளில் அவர் 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளதால் இனிமேல் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார்.

இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 83 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் இரு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

wahab riaz

34 வயதான வகாப் ரியாஸ் தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும், தொடர்ந்து தனது உடல் தகுதியை கவனித்துக்கொண்டு பாகிஸ்தான் அணிக்காக இன்னும் சில ஆண்டுகள் விளையாட இருப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement