அடுத்த டெஸ்ட் போட்டியில் நிச்சயம் இவர் பிளேயிங் லெவனில் விளையாடனும் – லக்ஷ்மனன் கருத்து

Laxman-1

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 4ஆம் தேதி நாட்டிங்காம் மைதானத்தில் தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டி ஆனது போட்டியின் ஐந்தாவது நாள் வரை சென்று கடைசி நாளில் பெய்த மழை காரணமாக டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படாதது அப்போதே பெரிய சர்ச்சையாக வெடித்தது.

indvseng

ஏனெனில் இந்திய அணியின் முன்னணி வீரராக விளங்கி வரும் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அனுபவம் உடையவர். அதுமட்டுமின்றி எந்த அணிக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படும் அஸ்வினை அணியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக ஜடேஜா விளையாடியது பெரிதளவு விமர்சனத்தைக் கிளப்பியது.

- Advertisement -

ஆனால் பின்வரிசையில் பேட்டிங்கை பலப்படுத்தும் நோக்கிலேயே ஜடேஜா அணியில் விளையாடுகிறார் என்று கோலியும் விளக்கம் அளித்திருந்தார். அதற்கேற்றார்போல் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் பந்துவீச்சில் 3 ஓவர்களை மட்டும் ஜடேஜா வீசினாலும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு அரை சதம் விளாசினார். இருப்பினும் அடுத்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின் மீண்டும் விளையாட வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

Ashwin

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ் லட்சுமணன் இதுகுறித்துக் கூறுகையில் : அடுத்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கண்டிப்பாக பிளேயிங் லெவனில் விளையாட வேண்டும். ஏனெனில் அஷ்வின் விளையாடுவது இந்திய அணிக்கு நிச்சயம் பலத்தை கொடுக்கும். அவரிடம் நிறைய வெரைட்டி பந்துகள் இருக்கின்றன.

- Advertisement -

ashwin 2

உலகின் எந்த ஒரு மைதானத்திலும், எந்த ஒரு சூழ்நிலையிலும் அஷ்வினால் சிறப்பாக செயல்பட முடியும். இதனால் நிச்சயம் அடுத்த போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அவர் அச்சுறுத்தலாக இருப்பார். என்னைப் பொறுத்தவரை அஸ்வின் அடுத்த போட்டியில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும், அவரை சேர்க்க வேண்டும் என லட்சுமணன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement