கேதார் ஜாதவை அணியில் எடுக்க இதுவே காரணம். அவரால் இந்த பிரச்சனை தீரும் – வி.வி.எஸ் லக்ஷ்மனன் பேட்டி

Laxman-1

இந்த வருடதிற்கான ஐபிஎல் தொடர் வருகின்ற ஏப்ரல் மே மாதங்களில் நடக்க இருக்கிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான மினி ஏலம் ஒன்று சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது. ஏலத்தில் பங்கெடுத்த அணிகள் தங்களது அணிக்கு ஏற்ப வீரர்களை தேர்ந்தெடுத்தனர்.அப்படி சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் கேதர் ஜாதவை 2 கோடிக்கு கைப்பற்றியது. இதுநாள் வரை சென்னைக்காக ஆடி வந்த கேதர் ஜாதவ் இந்தாண்டு அந்த அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

Jadhav-2

கடந்த ஓரிரு ஆண்டுகளாக சரியா ஃபார்ம்மில் இல்லாதததே இந்த நீக்கத்திற்கான காரணம். அப்படி இருக்க ஜாதவை சன் ரைஸர்ஸ் வாங்கியது முட்டாள்தனமான முடிவு என ரசிகர்கள் கமண்ட் செய்து வந்துள்ள நிலையில் ஹைதராபாத் அணியின் பேட்டிங் பயிற்சியாளரான விவிஎஸ் லக்‌ஷ்மன் ஜாதவை எடுத்த காரணத்தை கூறியுள்ளார்.

ஹைதராபாத் அணியில் சில ஆண்டுகளாக மிடில் ஆர்டரில் நின்று ஆடக்கூடிய பேட்ஸ்மேன் யாருமில்லை.ஓப்பனிங்கில் வார்னர், பேர்ஸடோ, வில்லயம்சன் போன்ற வீரர்கள் நன்றாக ஸ்கோர் செய்து பின்னர் அதை தக்க வைத்துநன்றாக இறுதி ஓவர் கொண்டு செல்ல எங்கள் அணி தவறி வருகிறது.எனவே ஜாதவை மிடில் ஆர்டரில் ஃபெர்பார்ம் செய்யவே வாங்கியுள்ளோம்.

Jadhav 1

மிகுந்த அனுபவம் நிறைந்த வீரரான ஜாதவ் பல போட்டிகளில் சென்னைக்காக மிடில் ஓவர்களில் சிறப்பாக ஆடியிருக்கிறார். பல போட்டிகளில் சென்னை அணியை ஆட்டத்தின் கடைசி வரை எடுத்து சென்றும் இருக்கிறார்.அவர் நிச்சயம் எங்கள் அணிக்கு கூடுதல் பலம் கொடுப்பார்.இனி ஹைதராபாத் அணியில் மிடில் ஆர்டர் பிரச்சனை என்ற ஒன்று இனி வராது அதற்கு நான் உறுதி என்றுகூறியுள்ளார்.

- Advertisement -

Jadhav-3

மேலும் சர்வதேச கிரிக்கெட்டிலும் சரி, ஐ.பி.எல் தொடர்களிலும் சரி ஜாதவ் நிறைய அனுபவம் உடையவர். அவரது இந்த அனுபவம் எங்களுக்கு கை கொடுக்கும் அவரை எடுத்த காரணம் சரி என்று ரசிகர்கள் போக போக உணர்ந்து கொள்வார்கள் என்று நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளை வி.வி.எஸ் லஷ்மணன் கூறியுள்ளார்.