உலகின் டாப் 3 டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் இவர்கள் தான் – வி.வி.எஸ் லக்ஷ்மனன் தேர்வு

Laxman
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் நிபுணருமான வி.வி.எஸ் லட்சுமணன் அவ்வபோது கிரிக்கெட்டில் நடைபெறும் சம்பவங்கள், வீரர்களின் செயல்பாடு என அனைத்தையும் சமூக வலைதளம் மூலமாக பகிரும் பழக்கமுடையவர். அந்த வகையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் 3 ஆல் ரவுண்டர்களை அவர் தேர்வு செய்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னைப் பொறுத்தவரை உலகின் நம்பர்-1 டெஸ்ட் ஆல்ரவுண்டர் என்றால் அது பென் ஸ்டோக்ஸ் தான்.

Stokes

- Advertisement -

அவருக்கு அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரரான ஜேசன் ஹோல்டர் இரண்டாவது இடத்தில் இருப்பார். மூன்றாவதாக நான் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்கிறேன். தற்போதைய கிரிக்கெட் உலகின் டெஸ்ட் போட்டிகளில் இந்த மூவர் தான் டாப் 3 ஆல்-ரவுண்டராக இருக்கிறார்கள் என லக்ஷ்மணன் தெரிவித்துள்ளார்.

ஜடேஜா குறித்து மேலும் அவர் கூறுகையில் : ஜடேஜா தரமான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும், வெவ்வேறு சூழ்நிலைகளிலும் தனது பேட்டிங் திறனை வெளிப்படுத்தி வருகிறார். என்னை பொருத்தவரை ஆல்ரவுண்டர் என்று கணக்கில் வந்தால் நான் ஜடேஜாவை உடனேயே அணியில் எடுப்பேன்.

Jadeja

அதுமட்டுமின்றி அவர் உலகின் தலை சிறந்த பீல்டராகவும் திகழ்ந்து வருகிறார். எப்பொழுது பேட்டிங் செய்ய வந்தாலும் மீண்டும் மீண்டும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். நாட்டிங்காமில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் கூட அணிக்கு தேவையான அரைசதத்தை அடித்தார்.

jadeja

அதுமட்டுமின்றி தற்போது நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் போதும் முதல் இன்னிங்சில் அவர் அடித்த 40 ரன்கள் இந்திய அணிக்கு கொடுத்தது. அந்த வகையில் இந்திய அணிக்காக ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இந்திய அணியின் மதிப்புமிக்க ஆல்ரவுண்டர் என ஜடேஜாவை புகழ்ந்து லட்சுமணன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement