- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பி.சி.சி.ஐ-யின் ஆஃபரை மறுத்த வி.வி.எஸ் லக்ஷ்மணன்.. தப்பிய கவுதம் கம்பீரின் பதவி – விவரம் இதோ

ராகுல் டிராவிட் கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடர் முடிந்த கையோடு இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து வெளியேறிய வேளையில் இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கௌதம் கம்பீரை அறிவித்தது. 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் மென்டராக மிகச் சிறப்பாக செயல்பட்டு அந்த அணி கோப்பையை வெல்ல உதவிய அவருக்கு இந்த வாய்ப்பை பிசிசிஐ வழங்கியிருந்தது.

பி.சி.சி.ஐ-யின் சலுகையை மறுத்த வி.வி.எஸ் லக்ஷ்மணன் :

அப்படி தனக்கு கிடைத்த பயிற்சியாளர் பதவியில் ஏகப்பட்ட கெடுபிடிகளை ஆரம்பத்தில் இருந்தே வைத்து செயல்பட்டு வரும் கௌதம் கம்பீர் இந்திய அணியில் இருந்து சில சீனியர் வீரர்களை கட்டாய ஓய்விற்கும் தள்ளினார். அதோடு அவருக்கு பிடித்த ஒருசில குறிப்பிட்ட வீரர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கினார்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி தனக்கு பொருத்தமாக இருக்கக்கூடிய தன் சொல் பேச்சினை கேட்கக்கூடிய பயிற்சியாளர் குழுவையே தேர்வு செய்திருந்தார். இப்படி கௌதம் கம்பீர் பயிற்சியின் மீது கலவையான விமர்சனங்கள் இருக்கும் வேளையில் இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிகள் அவரது பயிற்சியின் கீழ் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

ஆனால் டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை இந்திய அணி மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. அதனால் அவர் டெஸ்ட் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என சில கருத்துக்கள் பரவலாக இருந்து வருகிறது. இந்நிலையில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு கம்பீர் பயிற்சியாளராகவும் டெஸ்ட் அணிக்கு லக்ஷ்மணனை பயிற்சியாளராகவும் மாற்ற திட்டமிட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கும் வி.வி.எஸ் லட்சுமணன் ஏற்கனவே சில சமயங்களில் இந்திய அணிக்கு தற்காலிக பயிற்சியாக இருந்த வேளையில் அவரை முழுநேர டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக மாறும்படி பி.சி.சி.ஐ கோரிக்கை விடுத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : காயமடைந்த சுப்மன் கில் மீண்டும் எப்போது களத்திற்கு திரும்புகிறார்? வெளியான உறுதியான தகவல்

ஆனால் பி.சி.சி.ஐ-யின் அந்த அழைப்பை மறுத்த அவர் நான் சீனியர் அணிக்கு பயிற்சியாளராக விரும்பவில்லை. தற்போது உள்ள பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன் என்றும் கூறி அதனை மறுத்துவிட்டாராம். இதன் காரணமாக கௌதம் கம்பீரின் பதவி தப்பியிருக்கிறது.

- Advertisement -