தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று ஆட்டங்களில் விளையாடியிருந்த இந்திய டி20 அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வந்தார். அவரது இந்த பேட்டிங் ஃபார்ம் சரிவு காரணமாக ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் அவருக்கு பதிலாக விளையாடியிருந்தார்.
சுப்மன் கில்லின் கம்பேக் எப்போது? :
ஆனால் காயத்தால் தான் எஞ்சியிருந்த தொடரில் இருந்து சுப்மன் கில் வெளியேறினார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி நான்காவது டி20 போட்டிக்கு முன்னதாக வலைப்பயிற்சியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. மேலும் எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம் பிடிக்கவில்லை.
அவரது மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதோடு சேர்த்து டி20 அணியிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக டி20 அணியின் புதிய துணை கேப்டனாக மீண்டும் அக்சர் பட்டேல் செயல்பட இருக்கிறார்.
இந்நிலையில் தென்னாப்பிரிக்க டி20 தொடரின் போது காயமடைந்து வெளியேறிய அவர் மீண்டும் எப்போது கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார்? என்கிற எதிர்பார்ப்பு பலரது மத்தியிலும் இருந்த வேளையில் அவர் மீண்டும் விளையாடும் போட்டி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வகையில் வெளியான அறிவிப்பில் : இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடருக்கான பஞ்சாப் அணியில் அவர் விளையாடுவார் என்றும் நியூசிலாந்து தொடருக்கு முன்னதாக அவர் இரண்டு உள்ளூர் போட்டியில் பங்கேற்பார் என்றும் உறுதியாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சி.எஸ்.கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.. ஆனா துணை கேப்டன் யார் தெரியுமா? – வெளியான தகவல்
அந்த வகையில் வரும் ஜனவரி 3-ஆம் தேதி சிக்கிம் அணிக்கு எதிரான போட்டியிலும், ஜனவரி 6-ஆம் தேதி கோவா அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அதன் பின்னர் ஜனவரி 11-ஆம் தேதி நியூசிலாந்து தொடர் துவங்குவதால் மும்பை அணிக்கு எதிரான போட்டியை அவர் தவற விடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.



