இவரோட பவுலிங் டாப் கிளாஸ். பேட்ஸ்மேன்களே பயப்படுறாங்கனும் கேள்வி பட்டிருக்கேன் – வி.வி.எஸ் லக்ஷ்மன் பேட்டி

Laxman
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2-வது போட்டி இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வி வி எஸ் லட்சுமணன் இந்த முதல் போட்டியில் பந்து வீசிய தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தியை பாராட்டி தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

IND

- Advertisement -

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில் : வருண் சக்கரவர்த்திக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது மகிழ்ச்சியான ஒரு செய்தி. ஏற்கனவே சில காரணங்களால் அவர் வாய்ப்பை இழந்து இருந்தாலும் இப்போது வாய்ப்பை பெற்று சிறப்பாக பந்துவீசி உள்ளது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

ஏற்கனவே வருண் சக்கரவர்த்தி ஐபிஎல் தொடரில் பந்து வீசிய போது சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் அவரை எதிர்கொண்ட விதம் பற்றி ஓய்வறையில் கேட்டிருக்கிறேன். அப்போது வீரர்கள் வருன் சக்ரவர்த்தி ஒரு ஓவரில் 6 பந்துகளையும் வெவ்வேறு விதமாக வீசுகிறார் என்றும் அதை எதிர்கொள்வதில் சில நேரங்களில் பயமாக இருக்கிறது எனவும் தெரிவித்து இருந்தார்கள்.

varun

இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவரது மிகச் சிறப்பாக பந்து வீசினார் என்று லட்சுமணன் புகழ்ந்து கூறியுள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலிய தொடரின் போது இடம்பெற்றிருந்த வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக அந்த தொடரில் விளையாட முடியாமல் போனது. அதன் பிறகு இங்கிலாந்து தொடரிலும் யோ யோ டெஸ்ட் தோல்வி காரணமாக பங்கேற்க முடியாமல் இருந்த வருண் சக்ரவர்த்தி இம்முறை இலங்கை அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement