இந்த 2 விஷயம் தான் சேவாக்கை உச்சத்துக்கு கொண்டு சென்றது – வி.வி.எஸ் லக்ஷ்மணன் புகழாரம்

Laxman
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான விவிஎஸ் லட்சுமணன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அசாத்தியமான ஆட்டத்தின் மூலம் இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். மேலும் இந்திய அணியின் பேட்டிங் ஜாம்பவான்களில் முக்கியமான ஒரு நபராக இருக்கும் இவர் தற்போது தன்னுடன் விளையாடிய கிரிக்கெட் வீரர்களை பாராட்டி வருகிறார்.

Sehwag

- Advertisement -

அந்த வகையில் சச்சின், கங்குலி, டிராவிட், கும்ப்ளே, ஸ்ரீநாத் ஆகியோரை பாராட்டி பேசிய லட்சுமணன் அந்த வரிசையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் சேவாக்கை பாராட்டிப் பேசியுள்ளார். இது தொடர்பாக லக்ஷ்மணன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் : தரமான வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சிறந்த ஆக்ரோஷமான டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரராக உருவெடுத்தவர் சேவாக்.

அவரின் அதீத நம்பிக்கையும், நேர்மறை எண்ணங்களும் மனதை கவரும் வகையில் உள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவாக் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து துவங்கும் வழக்கம் உடையவர். அவரது இந்த அதிரடிக்கு ஒரு தனி ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

அந்த வகையில் எந்த வகை கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் அதிரடியை மட்டுமே கையில் எடுத்து தொடர்ந்து எதிர் அணிக்கு நெருக்கடி அளிக்க கூடிய சேவாக் இதுவரை இந்திய அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகள், 251 ஒருநாள் போட்டிகள் மற்றும் 19 டி20 போட்டிகள் விளையாடியுள்ளார். இவை அனைத்தையும் சேர்த்து கிட்டத்தட்ட 17 ஆயிரம் ரன்களை அவர் விளாசியுள்ளார்.

- Advertisement -

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்பது மட்டுமின்றி இரண்டுமுறை முச்சதங்களை விளாசியுள்ளார். சேவாக் எப்பொழுது கிரிக்கெட் போட்டிகளை விளையாடும் போதும் தான் களத்தில் இறங்கும் பொழுது தன்னம்பிக்கையுடன் களமிறங்கி பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நேர்மறையான எண்ணங்களுடன் அடித்து நொறுக்குவார்.

அவரது தன்னம்பிக்கை மற்றும் நேர்மறை எண்ணம் ஆகிய இரண்டு மட்டுமே அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது என்று லட்சுமணன் சேவாக் குறித்து புகழ்ந்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கொரோனா ஓய்வு நேரத்தில் அனைத்து முன்னணி வீரர்களும் தங்களது கிரிக்கெட் அனுபவங்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement