நாங்கள் விளையாடிய காலத்தில் இவரே சுயநமில்லாமல் இந்திய அணிக்காக விளையாடியவர் இவர்தான் – வி.வி.எஸ் லக்ஷ்மனன் புகழாரம்

Laxman-1
- Advertisement -

கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் இந்திய அணியின் பேட்டிங்கைப் பார்த்தால் எந்த அணியின் பந்து வீச்சுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து இருக்கும். அந்த வரிசையில் விரேந்தர் சேவாக் , சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமணன் என ஒரு பேட்டிங் ஜாம்பவான் படையே இருக்கும்.

Laxman

- Advertisement -

இந்த ஐந்து வீரர்களும் அந்த காலகட்டத்தில் மிகச்சிறந்த 5 வீரர்கள் என்றே அழைக்கப்பட்டனர். இதில் குறிப்பாக விவிஎஸ் லட்சுமணன் டெஸ்ட் போட்டிகளில் மிகவும் ஸ்பெஷலான வீரர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நன்றாக ஆடுவதில் பெயர் பெற்றவர். இந்நிலையில் தனது சக வீரரான ராகுல் டிராவிட் பற்றி விவிஎஸ் இலட்சுமணன் புகழ்ந்து பேசியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளது…

ராகுல் டிராவிட் ஒரு மிகச்சிறந்த மாணவர். அவர் எப்போதும் அணிக்காக விளையாடும் ஒரு வீரர். எந்த ஒரு சவாலையும் நேரெதிரே எதிர்கொண்டு அர்ப்பணிப்புடன் செய்து முடிப்பார். ஒரு சில வேலைகளை தன்னால் முடியாது என்று சொல்லக்கூடிய நேரம் வரும் .ஆனால் அது அணிக்காக இருந்தால், முடியாது என்று சொல்லாமல் ஒப்புக்கொள்வார். அப்படித்தான் விக்கெட் கீப்பராக செயல்பட ஒப்புக்கொண்டார்.

dravid

டெஸ்ட் போட்டிகளிலும் தொடக்க வீரராக களம் இறங்கியுள்ளார். இதுபோன்று மிகச்சிறந்த வீரராக இருந்துள்ளார் ராகுல் டிராவிட் என்று கூறியுள்ளார் விவிஎஸ் லட்சுமணன். ராகுல் டிராவிட் மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் வரலாற்றுச் சிறப்புமிக்க கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் 300+ ரன் கூட்டணி வைத்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Dravid 1

மேலும் விரேந்தர் சேவாக்குடன் சேர்ந்து துவக்க வீரராக களமிறங்கி பாகிஸ்தானில் பாகிஸ்தானுக்கு எதிராக 400 ரன்கள் கூட்டணியும் அமைத்தவர். மொத்தம் இந்திய அணிக்காக அவர் 164 டெஸ்ட் போட்டிகளிலும் 364 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார் .தற்போது இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கும் இந்திய ஏ அணிக்கும் பயிற்சியாளராக இருக்கிறார் ராகுல் டிராவிட்

Advertisement