46க்கு அவுட் பரவால்ல.. இப்போவும் கெட்டுப்போகல.. 4வது நாளில் இதை செஞ்சா இந்தியா ஜெய்க்கும்.. லக்ஷ்மன் பேட்டி

VVS Laxman 2
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியை தவிர்க்கப் போராடி வருகிறது. அக்டோபர் 16ஆம் தேதி மழையால் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 46க்கு ஆல் அவுட்டானது. அதனால் சொந்த மண்ணில் குறைந்தபட்ச டெஸ்ட் ஸ்கோர் பதிவு செய்து இந்தியா மோசமான சாதனை படைத்தது.

அதிகபட்சமாக ரிசப் பண்ட் 20 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து டேவோன் கான்வே 91, ரச்சின் ரவீந்திரா 134 ரன்கள் எடுத்த உதவியுடன் 402 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

போராடும் இந்தியா:

பின்னர் விளையாடும் இந்தியா மூன்றாவது நாள் முடிவில் 231-3 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 35, கேப்டன் ரோகித் சர்மா 52 ரன்களில் போராடி அவுட்டானார்கள். விராட் கோலியும் 70 ரன்கள் குவித்து அவுட்டான நிலையில் களத்தில் சர்பராஸ் கான் 70* ரன்களுடன் உள்ளார். தற்சமயத்தில் 125 ரன்கள் பின்தங்கியுள்ள இந்தியாவிடம் 7 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் இருப்பதால் இப்போட்டியில் வெல்வது கடினமாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இங்கிருந்து எப்படியாவது போராடி 275 ரன்கள் குவித்து 150 போன்ற ரன்களை இலக்காக நிர்ணயித்தால் நம்முடைய பவுலர்கள் இந்தியாவை வெற்றி பெற வைக்கும் திறமையைக் கொண்டுள்ளதாக ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சர்பராஸ் கான் நன்றாக பேட்டிங் செய்கிறார் என்பது எனக்குத் தெரியும்”

- Advertisement -

இந்தியாவால் முடியும்:

“நாம் நம்புகிறோம். என்னைப் போன்ற முன்னாள் வீரர்கள் , பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அல்லது ரோகித் சர்மாவாக இருந்தாலும் நாட்டுக்காக விளையாடும் ஒவ்வொருவரும் மேஜிக்கை நிகழ்த்தும் திறமையுடையவர் என்பது உங்களுக்குத் தெரியும். தற்போதைய சூழ்நிலையில் என்னுடைய அணிக்கு பங்காற்றி எப்படியாவது நம்முடைய பவுலர்களுக்கு 150 ரன்களை கொடுக்க வேண்டும் என்பதே நமது பேட்ஸ்மேன்களின் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் என்று சொல்வேன்”

இதையும் படிங்க: 46க்கு அவுட்டான அப்றமும் சுயநலமின்றி இதை செஞ்ச ரோஹித்.. சிறந்த லீடருக்கு எடுத்துக்காட்டு.. லக்ஷ்மன் பாராட்டு

“பந்து பிடித்து சுழலத் துவங்கியுள்ளது. நம்மிடம் 3 உலகத் தரமான ஸ்பின்னர்கள் உள்ளனர். எனவே அடுத்ததாக பேட்டிங் செய்யும் வீரர்கள் மனதில் இதுவே இருக்கும். சர்பராஸ் அழுத்தமான சூழ்நிலையில் வந்து கவர்ஸ் திசைக்கு மேலே அழகான சிக்ஸர் அடித்தார். சர்பராஸ், ஜெய்ஸ்வால், ரோஹித் அனைவருமே தங்களது இயற்கை ஆட்டத்தை விளையாடினர். தற்சமயத்தில் முடிவை நம்மால் கணிக்க முடியாது. இருப்பினும் இந்த நேர்மறையான மனதுடன் நாம் விளையாட வேண்டும் என்று சொல்வேன்” எனக் கூறினார்.

Advertisement