பெங்களூருவில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 46க்கு ஆல் அவுட்டானது. அதனால் தங்களுடைய சொந்த மண்ணில் குறைந்தபட்ச டெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்து இந்தியா மோசமான சாதனை படைத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
பின்னர் விளையாடிய நியூசிலாந்து டேவோன் கான்வே 91, ரச்சின் ரவீந்திரா 134 ரன்கள் எடுத்த உதவியுடன் 402 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதன் பின் விளையாடும் இந்தியா மூன்றாவது நாள் முடிவில் 231-3 ரன்கள் குவித்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
ஒப்புக்கொண்ட ரோஹித்:
ஜெய்ஸ்வால் 35, கேப்டன் ரோஹித் 52, விராட் கோலி 70 ரன்களில் போராடி ஆட்டமிழந்த நிலையில் களத்தில் சர்பராஸ் கான் 70* ரன்களுடன் போராடி வருகிறார். முன்னதாக இப்போட்டியில் மழை பெய்ததால் வேகத்துக்கு சாதகமாக பிட்ச்சில் டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்தது 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாக முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் பிட்ச்சை தாம் தவறாக படித்து விட்டதாக ரோகித் சர்மா தாமாக முன்வந்து தவறை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் 46க்கு ஆல் அவுட்டான பின் சாக்கு சொல்லாமல் முன்னோக்கி வந்து தவறை ஒப்புக்கொண்ட ரோகித் சர்மா சிறந்த லீடருக்கு எடுத்துக்காட்டாக செயல்பட்டதாக ஜாம்பவான் விவிஎஸ் லஷ்மன் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கேப்டனாக இருந்தாலும் மனிதராக தவறுகள் செய்யாமல் இருப்பது அசாத்தியமானது. டாஸ் வென்ற நாம் முதலில் பேட்டிங் செய்தோம்”
லீடருக்கு எடுத்துக்காட்டு:
“அது 46க்கு அவுட்டானதால் மோசமான முடிவாக அமைந்தது. அன்றைய நாள் முடிவில் யார் செய்தியாளர்களை சந்தித்தார்? அது ரோஹித் சர்மா. அவர் ஆம் நான் பிட்ச்சை தவறாக படித்து விட்டேன் என்பதை ஒப்புக்கொண்டார். ஒவ்வொரு முறையும் உங்களுடைய முடிவு சரியாக செல்ல வேண்டும் என்று அவசியம் கிடையாது. ஆனால் அணி சுமாராக செயல்படும் போது கேப்டன் முன்னோக்கி சென்று சவாலை எதிர்கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க: அதெப்படி கடைசி நேரத்தில் சுப்மன் கில்லுக்கு இப்படி ஆச்சுன்னு தெரியல – கிண்டல் செய்த சீக்கா
“அணி அசத்தும் போது அதற்காக காரணமாக இருக்கும் வீரரை நீங்கள் வெளிச்சத்திற்கு செல்ல அனுமதிக்க வேண்டும். அணியில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்துபவர்களே சிறந்த லீடர்கள். அதற்கு ரோகித் சர்மா சிறந்த எடுத்துக்காட்டு. களத்திற்கு சென்று நாம் சுயநலமின்றி விளையாடும் ஸ்டைலை பின்பற்ற வேண்டும் என்று அவர் தனது வீரர்களிடம் சொல்லியுள்ளார். அது அவரது சொந்த செயல்பாடுகளை பாதிக்கலாம். ஆனால் இந்திய அணிக்காக அவர் மற்ற வீரர்களுக்கு ஆதரவு கொடுக்கிறார்” என்று கூறினார்.



