ஐ.பி.எல் கோப்பையை வெல்லும் அணி இதுதான். வி.வி.எஸ் லக்ஷ்மன் நம்பிக்கை – விவரம் இதோ

Laxman-1

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியாக 56வது போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை குவித்தது.

அதிகபட்சமாக பொல்லார்ட் 25 பந்துகளில் 4 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் என 41 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 36 ரன்களையும், இஷான் கிஷன் 33 ரன்களை குவித்தனர். சன்ரைசர்ஸ் அணி சார்பாக சந்தீப் சர்மா சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 34 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ஹோல்டர் 4 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும், நதீம் 4 ஓவர்களில் 19 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதன் பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 17.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 151 ரன்களை குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றில் வாய்ப்பை தக்க வைத்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான வார்னர் மற்றும் சஹா இருவரும் ஆட்டமிழக்காமல் முறையே 85 மற்றும் 58 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். சபாஷ் நதீம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

srh

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் ஆலோசகர் வி.வி.எஸ் லட்சுமணன் கூறுகையில் : இந்த ஒட்டுமொத்த அணியையும் நினைக்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக பஞ்சாப் அணிக்கு எதிராக சிறிய இலக்கை துரத்தாமல் தோல்வியடைந்த வீரர்கள் தற்போது சிறப்பான ரன் குவிப்பை காண்பித்து வருகின்றனர்.

- Advertisement -

அதுமட்டுமின்றி புவனேஸ்வர் குமார் காயம் அடைந்து வெளியேறியதற்கு பின் ஒவ்வொரு வீரரும் தாங்களாக முன்வந்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகின்றனர். சஹா கடந்த இரண்டு போட்டிகளாக சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். ஒவ்வொருவரும் இதேபோன்று அணியில் ஈடுபாடு காண்பதால் காண்பிப்பது அணியை முன்னுக்குக் கொண்டு செல்கிறது.

Sandeep

இந்த அணியால் அனைத்து அணிகளையும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. அடுத்து வரும் போட்டிகளுக்காக நாங்கள் தயாராகி வருகிறோம். மேலும் கோப்பையை வெல்லும் தகுதியும் எங்களிடம் உள்ளது என்று லஷ்மண் கூறியது குறிப்பிடத்தக்கது.