விராட் கோலி சேஸ் மஸ்டராக இருக்கலாம் ஆனால் இவர் அவரையும் மிஞ்சியவர் – முன்னாள் பாக் வீரர் அதிரடி கருத்து

Virat Kohli Babar Azam
- Advertisement -

கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் களத்திலும் களத்திற்கு வெளியேயும் போட்டி போடுவது இயல்பாகும். மேலும் இந்திய வீரர்களை விட தங்களது வீரர்கள் மிகச் சிறப்பானவர்கள் என்று அந்நாட்டை சேர்ந்த முன்னாள் வீரர்கள் வம்படியாக பேசுவதும் வழக்கமாகும். அந்த வகையில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பின் நவீன கிரிக்கெட்டில் 3 வகையான போட்டிகளிலும் 50+ பேட்டிங் சராசரியில் எதிரணிகளை பந்தாடி 24000+ ரன்களையும் 71 சதங்களையும் விளாசி ஏராளமான சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்து 33 வயதிலேயே தன்னை ஜாம்பவானாக நிரூபித்துள்ள விராட் கோலியை விட சமீப காலங்களாக சிறப்பாகச் செயல்பட்டு வரும் பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மென் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பேசுவது வாடிக்கையாகும்.

Virat Kohli

- Advertisement -

இதில் 10 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட விராட் கோலி 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் தவித்த கதைக்கு சமீபத்திய ஆசிய கோப்பையில் சதமடித்து முற்றுப்புள்ளி வைத்தார். மறுபுறம் அவர் தடுமாறிய 2019க்குப்பின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்றழைக்கும் அளவுக்கு 3 வகையான கிரிக்கெட்டிலும் அபாரமாக செயல்பட்ட பாபர் அசாம் ஆசிய கோப்பையில் பார்மை இழந்து நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் அந்தஸ்தையும் இழந்து தடுமாறியதால் விமர்சனங்களை சந்தித்தார்.

சேஸ் மாஸ்டர்:
அந்த நிலைமையில் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்க்கும் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2வது போட்டியில் 200 ரன்களை துரத்திய போது அபாரமாக பேட்டிங் செய்த பாபர் அசாம் 11 பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்து 110* (66) ரன்கள் விளாசி பார்முக்கு திரும்பி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தார். ஏற்கனவே கடந்த வருடம் செஞ்சூரியனில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒரு போட்டியில் சேசிங் செய்யும்போது சதமடித்த அவர் டி20 கிரிக்கெட்டில் சேசிங் செய்யும்போது 2 சதங்களை அடித்த முதல் கேப்டன் என்ற உலக சாதனை படைத்துள்ளார்.

அந்த வகையில் சேசிங் செய்வதில் விராட் கோலியை பாபர் அசாம் மிஞ்சி விட்டதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் பாராட்டியுள்ளார். பொதுவாகவே சேசிங் செய்வதில் கில்லாடியான விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் சேசிங் செய்கையில் அதிக சதங்களை அடித்து உலக சாதனை படைத்துள்ளார். அதனால் ரசிகர்களும் வல்லுநர்களும் அவரை சேஸ் மாஸ்டர் என்றழைக்கும் நிலையில் பாபர் அசாம் சேசிங் கலையின் மாஸ்டராக திகழ்வதாக கூறும் சோயப் அக்தர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த சேசிங்க்கு தலை வணங்குகிறேன். விராட் கோலி சேஸ் மாஸ்டர், ஆனால் பாபர் அசாம் சேசிங் கலையின் மாஸ்டர் ஆவார். ஒரு கட்டத்தில் சேசிங் செய்வதற்கான யுக்திகளில் விராட் கோலி சிறந்த கேரக்டரை காட்டினார். இருப்பினும் பாபர் அசாம் அதை நகலெடுத்து அவரையும் மிஞ்சிய பேட்டிங்கை காட்டியுள்ளார். அந்த வகையில் இந்த உலகிலேயே பாபருடைய க்ளாஸ் மற்ற அனைவரையும் விட சிறப்பாக உள்ளது. அவருடைய பேட்டிங் அழகு, ஷாட் செலக்சன் என அனைத்தும் க்ளாஸ் ஆகும்”

Kohli and Akhtar

“அதிலும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 150 – 160 தாண்டி விட்டால் வேற லெவலில் விளையாடுகிறார். அதை அவர் செய்யும் போது பாகிஸ்தான் வெல்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய இந்த போட்டியில் ரன் ரேட் மற்றும் ஸ்ட்ரைக் ரேட்டை அவர் கட்டுப்படுத்தி விளையாடிய விதம் தான் பாகிஸ்தானுக்கு தேவைப்படுகிறது. அப்போட்டியில் 2 தொடக்க வீரர்களும் சிறப்பாக விளையாடினர்.

- Advertisement -

குறிப்பாக தன்னை ஏன் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்று சொல்கிறார்கள் என்பதைக் காட்டும் அளவுக்கு பாபர் பேட்டிங் செய்யும் போது ரிஸ்வான் வேலை எளிதாகிறது”. “அவர்கள் இருவரும் தங்களை புரிந்துகொண்டு விளையாடினர். மேலும் ஸ்ட்ரைக் ரேட் முக்கியம் என்றாலும் அதை ஒவ்வொரு போட்டியிலும் கடைபிடிக்க முடியாது. இருப்பினும் மிடில் ஆர்டருக்கு அழுத்தம் ஏற்படாத அளவுக்கு நீங்கள் விளையாட வேண்டும்.

இதையும் படிங்க : பிளாட்டான பிட்ச்சில் தடுமாறும் அவரை டி20 உ.கோ அணியில் சேர்த்து தப்பு பண்ணீட்டிங்க – சஞ்சய் மஞ்ரேக்கர் கவலை

அப்போதுதான் அவர்கள் ஓவருக்கு 13 ரன்கள் தேவை என்ற அழுத்தமான சூழ்நிலையை சந்திக்காமல் சேஸிங் செய்து வெற்றி பெற முடியும்” என்று கூறினார். அதாவது 10 வருடங்களாக சிறப்பாக செயல்பட்ட விராட் கோலியை விட ஒரு சில வருடங்கள் ஒரு சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட பாபர் அசாம் சேசிங்கின் கலைஞன் என்று சோயப் அக்தர் பாராட்டியுள்ளார்.

Advertisement